Tamil Nadu Weather Today: இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதேபோல அடுத்த இரு நாட்களுக்கு (18.01.2024 மற்றும் 20.01.2024) தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பா. செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியது..
21.01.2024 மற்றும் 22.01.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மேலும் படிக்க - வானிலை தகவல்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வது எப்படி? நீங்களும் நிபுணராகலாம்..!
வட இந்தியா கடும் குளிர் அலை இருக்கும் -ஐஎம்டி
இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) அறிக்கைபடி, அடுத்த ஐந்து நாட்களுக்கு வட இந்தியாவின் சில பகுதிகளில் அடர்த்தியான மற்றும் மிகவும் அடர்த்தியான மூடுபனி மற்றும் குளிர் அலை தொடரக்கூடும். அடுத்த ஐந்து நாட்களுக்கு வடமேற்கு இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் குளிர் அலை முதல் கடுமையான குளிர் அலை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை 2-5 டிகிரி செல்சியஸ்
பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 2-5 டிகிரி செல்சியஸ் வரையிலும், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், வட மத்தியப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளில் 6-10 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை, பனிபொழிவு இருக்கக்கூடும் -IMD
வட இந்தியாவின் சமவெளி பகுதிகளில் குளிர் காற்று வேகமாக வீசக்கூடும். ஜம்மு காஷ்மீர், லடாக், கில்கிட் பால்டிஸ்தான், முசாபராபாத் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை/பனிபொழிவு இருக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டிலும் நாளை (புதன்கிழமை) மழை அல்லது பனிப்பொழிவுக்கான வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க - மனதளவில் பலமாக இருப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை பின்பற்றுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ