லோக்சபா தேர்தல், கட்டம் 2: உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் தேர்தல் திருவிழா என பார்க்கப்படும் இந்தியாவின் 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாளை (ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை) இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. கடைசி கட்டமான ஜூன் 1 ஆம் தேதியுடன் தேர்தல் முடிவடைகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் பட்டியல்
மக்களவைத் தேர்தல் முதல் கட்டத்தில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என 102 இடங்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகின என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முதல் கட்டத்தில் தேர்தலில் தமிழ்நாடு (39), உத்தரகாண்ட் (5), அருணாச்சலப் பிரதேசம் (2), மேகாலயா (2), அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் (1), மிசோரம் (1), நாகாலாந்து (1), புதுச்சேரி (1), சிக்கிம் (1) மற்றும் லட்சத்தீவு (1) ஆகிய அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் பட்டியல்
நாளை நடைபெறவுள்ள இரண்டாம் கட்டத்தில் அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நாளை (ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை) காலை 7:00 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடையும்.
மேலும் படிக்க - லோக்சபா தேர்தல் 2024: 2வது கட்ட வாக்குப்பதிவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்
2ஆம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் மாநில வாரியான தொகுதிகளின் முழுப் பட்டியல்
அசாம் (5)
கரீம்கஞ்ச், சில்சார், மங்கல்டோய், நவ்காங், கலியாபோர்.
பீகார் (5)
கிஷன்கஞ்ச், கதிஹார், பூர்னியா, பாகல்பூர், பாங்கா.
சத்தீஸ்கர் (3)
ராஜ்நந்த்கான், மஹாசமுந்த், கான்கேர்.
ஜம்மு & காஷ்மீர் (1)
ஜம்மு.
கர்நாடகா (14)
உடுப்பி சிகாமகளூர், ஹாசன், தெற்கு கன்னடா, சித்ரதுர்கா, தும்கூர், மாண்டியா, மைசூர், சாமராஜநகர், பெங்களூர் ரூரல், வடக்கு பெங்களூர், பெங்களூர் சென்ட்ரல், தெற்கு பெங்களூரு , சிக்பல்லாபூர், கோலார்.
கேரளா (20)
காசர்கோடு, கண்ணூர், வடகரா, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பொன்னானி, பாலக்காடு, ஆலத்தூர், திருச்சூர், சாலக்குடி, எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, மாவேலிக்கரா, பத்தனம்திட்டா, கொல்லம், அட்டிங்கல், திருவனந்தபுரம்.
மேலும் படிக்க - மோடி vs ராகுல்: வெறுப்பு பேச்சு.. பாஜக மற்றும் காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
மத்திய பிரதேசம் (7)
திகம்கர், தமோஹ், கஜுராஹோ, சத்னா, ரேவா, ஹோஷங்காபாத், பெதுல்.
மகாராஷ்டிரா (8)
புல்தானா, அகோலா, அமராவதி (SC), வார்தா, யவத்மால்-வாஷிம், ஹிங்கோலி, நான்டெட், பர்பானி.
மணிப்பூர் (1)
அவுட்டர் மணிப்பூர்.
ராஜஸ்தான் (13)
டோங்க்-சவாய் மாதோபூர், அஜ்மீர், பாலி, ஜோத்பூர், பார்மர், ஜலோர், உதய்பூர், பன்ஸ்வாரா, சித்தோர்கர், ராஜ்சமந்த், பில்வாரா, கோட்டா, ஜலவர்-பரான்.
திரிபுரா (1)
திரிபுரா கிழக்கு
உத்தரப் பிரதேசம் (8)
அம்ரோஹா, மீரட், பாக்பத், காசியாபாத், கௌதம் புத் நகர், அலிகார், மதுரா, புலந்த்ஷாஹர்.
மேற்கு வங்கம் (3)
டார்ஜிலிங், ராய்கஞ்ச், பலூர்காட்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ