ஆகஸ்ட் 1 முதல் விமான டிக்கெட் ரத்து கட்டணம் குறைவு

Last Updated : Jul 14, 2016, 04:56 PM IST
ஆகஸ்ட் 1 முதல் விமான டிக்கெட் ரத்து கட்டணம் குறைவு title=

விமான பயணிகளுக்கு டிக்கெட் ரத்து செய்யப்படும் போது விமான நிறுவனங்கள் பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணங்கள் பிடிக்கப்படுவதை தடுக்க வரும் ஆகஸ்ட் 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கிறது. விமான நிறுவனங்கள் ரத்து செய்வதற்கான கட்டணம், அடிப்படை கட்டணம் மற்றும் எரிபொருள் கட்டணம் ஆகிய இரண்டையும் விட அதிகமாக உள்ளது என்று விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

*புதிய விதிகள் அமலுக்கு வந்தால் பயணிகள் டிக்கெட் ரத்து செய்யும் போது சட்டப்பூர்வ வரி மற்றும் பயனர் விரிவாக்கக் கட்டணம், விமான நிலைய வளர்ச்சி கட்டணம், பயணிகள் சேவை கட்டணம்  அனைத்தையும் விமான நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. 

*கூடுதல் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்ய டிக்கெட் ரத்து செய்யும்போது, ரத்துக் கட்டணத்தை திருப்பி அளிப்பது மட்டும் இல்லாமல் பிரேக்கப் விவரங்களை டிக்கெட்டிலும், 

*இணையதளத்திலும் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

*திருப்பி அளிக்கும் கட்டணத்தை விமான நிறுவன கிரெடிட்டில் இருக்க வேண்டுமா அல்லது கணக்கில் சேர வேண்டுமா என்பதைப் பயணிகள் தேர்வுசெய்து கொள்ளலாம். டிக்கெட் புக்கிங் செய்யப்படும்  போது பயணிகளின் பெயர்களில் ஏற்படும் எழுத்துப் பிழைகளைத் திருத்த கட்டணங்கள் ஏதும் வசுலிக்க கூடாது.

*டிராவல் ஏஜெண்ட்கள் மூலமாக புக் செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்யும் போது, விமான நிறுவனங்களே அதற்கான பொறுப்பு. ஒரு வேலை டிராவல் ஏஜெண்ட் விமான நிறுவனத்தின் முகவராக   இருந்தால், விமான நிறுவனம் 30 வேலை நாட்களுக்குள் தொகை திருப்பி அளிக்க வேண்டும்.

*இந்தியாவிற்கு வருகின்ற வெளிநாட்டு விமான சேவையாக இருந்தால் பணம் திருப்பி அளிக்கும் விதி, அந்நாட்டு விமான போக்குவரதுத் துறையின் கட்டுபாட்டின் கீழ் வழங்க வேண்டும் என்றும்   விமான போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

Trending News