Farmers Protest: பல மாநில விவசாயிகள் இன்று தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ‘டெல்லி சலோ’ என்ற மிகப்பெரிய பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். பல மாநிலங்களிலிருந்து விவசாயிகள் இன்று டெல்லியை நோக்கி தங்கள் பேரணியை தொடங்கவுள்ளனர். பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து விவசாயிகள் இன்று டெல்லியை நோக்கி வரத்தொடங்குவார்கள். இந்த பேரணியில் 200 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க இந்த பேரணி திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக திங்கள்கிழமை இரவு மத்திய அமைச்சர்கள் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் இறுதி அமர்வில் எந்த வித முடிவும் எட்டப்படவில்லை. இது பற்றி தெரிவித்த மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா, விவசாயிகள் கோடிட்டுக் காட்டியுள்ள பெரும்பாலான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக கூறினார். மீதமுள்ள பிரச்சினைகளைக் கையாள ஒரு குழுவை அமைக்க அரசாங்கம் பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (Minimum Support Price) தெளிவான சட்ட உத்தரவாதம் இல்லை என்று விவசாயிகள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் பேரணி எப்போது தொடங்கும்
விவசாயிகளின் டெல்லி சலோ பேரணி இன்று காலை 10 மணிக்குத் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. எனினும், பஞ்சாபிலிருந்து ஹரியானாவிற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்க ஹரியானா அரசாங்கம் மாநில எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ளது. முன்னர் நடந்த விவசாயிகள் போராட்டத்தை போல இது தீவிர நிலையை எட்டாமல் இருக்க டெல்லியின் எல்லைகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் நாட்களில் விவசாய அமைப்புகளால் பல்வேறு பேரணிகள் திட்டமிடப்பட்டுள்ளாதாக தெரியவந்துள்ள நிலையில், டெல்லி மற்றும் அதன் எல்லைகளில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க | ஆம் ஆத்மி கட்சி தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமின் -நீதிமன்றம் உத்தரவு
முன்னதாக, திங்களன்று மத்திய அமைச்சர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தலேவால், “பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எங்களின் போராட்டம் தொடரும். நாளை காலை 10 மணிக்கு டெல்லியை நோக்கி புறப்படுவோம்” என்று கூறினார்.
இன்று இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கவுள்ள விவசாயிகளின் 'டெல்லி சலோ' அணிவகுப்புக்கு ஆயத்தமாக, தேசிய தலைநகரின் மூன்று எல்லைகளிலும் வாகன போக்குவரத்துக்கான வரம்புகளை பயணிகளுக்கு தெரிவிக்கும் போக்குவரத்து ஆலோசனையை டெல்லி காவல்துறை வழங்கியுள்ளது.
Traffic Advisory
In view of the proposed farmers' protest at various borders of Delhi from 13.02.2024, traffic will be affected.
For commercial vehicles, traffic restrictions/diversions will be imposed from 12.02.2024.
Kindly follow the advisory.#DPTrafficAdvisory pic.twitter.com/3KDZbWP7Pu
— Delhi Traffic Police (@dtptraffic) February 11, 2024
எதற்காக இந்த பேரணி
பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, அதாவது எம்எஸ்பி (MSP) உள்ளிட்ட விவசாயிகளின் பல கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வற்புறுத்துவதற்காக செவ்வாய்கிழமை டெல்லி சலோ பேரணி தொடங்கப்படும் என சம்யுக்தா கிசான் மோர்ச்சா (Samyukta Kisan Morcha) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா (Kisan Mazdoor Morcha) ஆகிய விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ