Delhi Election 2025 Result: தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியான நிலவரத்தின் படி, டெல்லி தேர்தல்களின் முன்னிலை நிலவரங்கள், மூலம் பாஜக தெளிவான பெரும்பான்மையைப் பெறுவதாகத் தெரிகிறது. 2013, 2015 மற்றும் 2020 தேர்தல்களில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பின்தங்கியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தான் போட்டியிட்ட தொகுதியில், மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி பின் தங்கியதற்கான காரணங்கள் என்ன என்பதுதான் பலர் மனதில் எழும் முக்கிய கேள்வி?
அரவிந்த் கெஜ்ரிவாலின் இமேஜ் பாதிப்பு
ஜன்லோக்பால் தொடர்பாக 2012ம் ஆண்டில் ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரே இயக்கத்தில் இருந்து உருவான அரவிந்த் கெஜ்ரிவாலின் ஊழலற்றவர் என்ற சுத்தமான பிம்பம் மக்கள் முன்ன் சர்ந்து போனது, இந்தத் தேர்தலில் பின்னடைவைச் சந்திக்க காரணமானது. மதுபானக் கொள்கை ஊழல், மாளிகை போன்ற வீடு கட்டிக் கொண்டது மற்றும் சிறைக்குச் சென்றாலும் ராஜினாமா செய்யாத அவரது பிடிவாதத்தால் அவரது நேர்மையானவர் என்ற இமேஜ் தகர்ந்தது
இலவசங்கள் கலாச்சாரம்
கடந்த 10 ஆண்டுகளில், இலவச மின்சாரம், இலவச தண்ணீர் உள்ளிட்ட பல அறிவிப்புகளால் ஆம் ஆத்மி தனக்குச் சாதகமான சூழலை உருவாக்கியது. இம்முறை இதைப் புரிந்து கொண்ட பாஜகவும் இதுபோன்ற பல அறிவிப்புகளை வெளியிட்டது. மறுபுறம், ஆம் ஆத்மி 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது மற்றும் பதவிக்கு எதிரான உணர்வுகள் இருந்தன. இதற்கிடையில், ஆம் ஆத்மி மற்றும் பாஜகவின் அறிக்கைகளைப் பார்த்தபோது, மக்கள் பாஜகவை ஒரு வலுவான தேர்வாகக் கண்டார்.
சமரச அரசியல்
ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரே இயக்கத்தில் இருந்து ஆம் ஆத்மி உருவானது. இதுவே அதன் அரசியல் மூலதனம், ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா போன்ற உயர்மட்ட தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிறகு கட்சியின் இமேஜ் அடிபட்டது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறுவதாகவும், ஜன்லோக்பால் போன்ற ஊழலுக்கு எதிரான மசோதாக்களை நிறைவேற்றவில்லை என்றும் அக்கட்சி மீது குற்றம் சாட்டப்பட்டது. இது நம்பகத்தன்மைக்கு நெருக்கடியை உருவாக்கியது. இது ஆம் ஆத்மி தனது முக்கிய பிரச்சினைகளை ஓரங்கட்டிவிட்டு அதிகார அரசியலை மட்டும் விளையாட ஆரம்பித்துவிட்டது என்ற உணர்வையும் ஏற்படுத்தியது.
ஆட்சிக்கு எதிரான மக்களின் மனோபாவம்
10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காரணத்தினால், ஆம் ஆத்மி ஒரு வலுவான எதிர்ப்பு அலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இலவசங்கள் தருவதாக கொடுக்கப்பட்ட அனைத்து அறிவிப்புகளையும் மீறி, ஆம் ஆத்மி மீதான மக்களின் அதிருப்தி அதிகரித்தது. மக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிரான உணர்வு ஏற்பட்டது.
ஷீலா தீட்சித் மாடல்
ஷீலா தீட்சித் தன் காலத்தில் டெல்லியின் தோற்றத்தை விதம் மக்கள் மனதில் இன்னும் உள்ளது. காங்கிரஸ் வலுவிழந்து காணப்பட்டது. ஆனால் ஷீலா தீட்சித்தின் வளர்ச்சி மாதிரி தேர்தல் முழுவதும் விவாதிக்கப்பட்டது. இதற்குக் காரணம், பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தாலும், ஆம் ஆத்மி கட்சி இலவச கலாச்சாரத்தை மட்டுமே நம்பியிருப்பதாகவும், வளர்ச்சியில் டெல்லி பின்தங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆட்டத்தை கெடுத்த காங்கிரஸ்
முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது, மேலும் பாஜக அங்கு வெற்றி பெற்றது. தேர்தலில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைக்க மறுத்ததே தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. காரணம், காங்கிரஸுக்கு வெற்றி பெற முடியாவிட்டாலும், தோற்கடிக்கும் திறன் காங்கிரஸுக்கு உள்ளது, ஏனெனில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுக்கு இருப்பது ஒரே வாக்கு வங்கி உள்ளது. இரண்டாவதாக, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, முஸ்லீம் பகுதிகளில் ஆம் ஆத்மியின் ஆட்டத்தையும் கெடுத்து விட்டது.
கட்சியில் நிலவிய அதிருப்தி
ஆட்சிக்கு எதிரான மக்கள் மனநிலையை கருத்தில் கொண்டு பல எம்எல்ஏக்களின் டிக்கெட்டுகளை கட்சி ரத்து செய்தது. எனவே, கட்சியில் அதிருப்தி நிலவியது மற்றும் தேர்தலுக்கு முன்பு டிக்கெட் மறுக்கப்பட்ட 7 சிட்டிங் எம்எல்ஏக்கள், ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தனர்.
மேலும் படிக்க - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வெற்றியை நோக்கி திமுக? மேஜிக் செய்யுமா நாம் தமிழர் கட்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ