புதுடெல்லி: டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. நேற்று காலை மழை பெய்த காரணத்தால் டெல்லியில் பனிமூட்டமானது அதிக அளவில் காணப்படுகிறது.
வட மாநிலங்களில் மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இன்று அதிகாலை முதல் அடர்ந்த பனிமூட்டம் மற்றும் காற்று வீசுவதால் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரயில், விமான சேவைகளிலும் மிகவும் பாதிப்பு ஏற்பட்டது. பனிப்பொழிவால் இன்று 25 ரயில்கள் சில மணி நேரம் தாமதம் அடைந்துள்ளன. 3 ரயில்களின் பயண நேர மாற்றியமைக்கப்பட்டுள்ளது மேலும் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Delhi: 25 trains arriving late, 3 rescheduled & 18 cancelled due to weather/operational reasons. pic.twitter.com/SpfBThSdJI
— ANI (@ANI) January 24, 2018
மேலும் உத்தரகாண்ட் மற்றும் ஹிமாச்சல் மாநிலங்களில் இன்று காலை முதல் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
Uttarakhand: Munsiyari in Pithoragarh district received fresh snowfall in the early morning hours pic.twitter.com/wpilNy2MlS
— ANI (@ANI) January 24, 2018
Himachal Pradesh's Shimla received fresh snowfall in the early morning hours ; #Visuals from Sanjauli area pic.twitter.com/i2ul2AnP1p
— ANI (@ANI) January 24, 2018