இந்தியாவுக்கு புல்லட் ரயில் தேவையில்லை; நாட்டை பாதுகாக்கும் வீரர்களுக்கு புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் தான் தேவை என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
லக்னோ: மத்திய அரசு புல்லட் ரயிலில் கவனம் செலுத்துவதை விட்டு நாட்டின் பாதுகாப்பு வீரர்களுக்கு புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் “ தற்போது நாட்டிற்கு புல்லட் ரயில் தேவையில்லை. அதை விட முக்கியம் பாதுகாப்பு வீரர்களுக்கு புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட். பிரதமர் மோடி தலைமையிலான மோடி அரசு இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் ஏன் உளவுத்துறை தோல்வியடைந்தது. அதற்காக வீரர்களின் உயிரை நீங்கள் சமன் செய்யக்கூடாது. நாட்டின் பாதுகாப்பிற்காக நீண்ட கால உத்தியை பயன்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
Akhilesh Yadav: Why is Intelligence failing? You can't compensate for loss of lives. The nation is with security forces&jawans. If all political parties have put their political events on hold, ruling party should do the same & form a long term strategy to secure borders. (18.02) pic.twitter.com/6TXEBGAR1g
— ANI UP (@ANINewsUP) February 18, 2019
முன்னதாக உரி மற்றும் புல்வாமா தாக்குதல் தொடர்பாக ராணுவம், உளவுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் வியாழக்கிழமை (பிப்., 14) ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாநிலத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தமிழகத்தை சார்ந்த சுப்ரமணியன், சிவச்சந்திரன் ஆகிய இரு வீரர்கள் உட்பட 44 CRPF வீரர்கள் பலி ஆனார்கள். இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் இந்திய மக்களிடையே பெரும் சோகத்தையும், கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.