புதுடெல்லி: கோவிட் -19 தொற்று எண்னிக்கை அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு, தேர்தலை எதிர்கொண்டிருக்கும் மாநிலங்களில் தேர்தல் பேரணிகள் மற்றும் சாலை நிகழ்வுகளுக்கான தடையை ஜனவரி 22 வரை இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ) சனிக்கிழமை (ஜனவரி 15) நீட்டித்துள்ளது.
அரசியல் கட்சிகள் அதிகபட்சமாக 300 நபர்களுடன் அல்லது நிகழ்வு நடக்கும் இடத்தின் திறனில் 50% மக்களுடன் உள்ளரங்கக் கூட்டங்களை நடத்துவதற்கு ECI அனுமதித்துள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் கட்சிகள் மாதிரி நடத்தை விதிகளின் விதிகள் மற்றும் தொற்றுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இணங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் (Election Commission) அறிவுறுத்தியது.
Election Commission further bans poll rallies & roadshows in poll-bound states till 22nd January pic.twitter.com/xXdqPNdKmo
— ANI (@ANI) January 15, 2022
ECI allows political parties to hold indoor meetings with a maximum of 300 persons or 50% of the capacity of the hall. pic.twitter.com/dR32PfMZlN
— ANI (@ANI) January 15, 2022
ALSO READ | 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்தது தேர்தல் ஆணையம்
ஜனவரி 8 ஆம் தேதி, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை EC அறிவித்த போது, ஜனவரி 15 ஆம் தேதி வரை பொது பேரணிகள், ரோட்ஷோக்கள் மற்றும் பிரச்சார நிகழ்வுகளை தடை செய்தது. இப்போது தடை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
உ.பி.யில் 403, பஞ்சாபில் 117, உத்தரகாண்டில் 60, மணிப்பூரில் உள்ள 60, கோவாவில் 40 ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா ஜனவரி 8ம் தேதி அறிவித்தார். தேர்தல் முடிவு மார்ச் 10 அன்று அறிவிக்கப்படும்.
இதற்கிடையில், சனிக்கிழமையன்று சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவில் 2,68,833 பேர் புதிதாக கோவிட் 19 (COVID-19) தொற்றால் பாதிக்கப்பட்டனர், 402 பேர் இறந்தனட். இது மொத்த இறப்பு எண்ணிக்கையை 4,85,752 ஆக உயர்த்தியது.
ALSO READ | குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்த முப்படை விசாரணைக்குழு அறிக்கை வெளியானது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR