போர்ட் பிளேயர்: நிகோபார் தீவுகளில் சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது இன்று காலை நள்ளிரவில் 1.59 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலநடுக்கத்தின் அளவானது ரிக்டர் அளவுகோலில் சுமார் 5-ஆக பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
An earthquake of magnitude 5.0 on the Richter scale hit Nicobar Islands Region at 1.59 am this morning: IMD-Earthquake
— ANI (@ANI) June 22, 2018