CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டது., வெளியான தேர்வு முடிவுகளின் படி கேரளா மாணவி ஒருவர் உள்பட 13 பேர் 500-க்கு 499 மதிப்பெண்கள் குவித்துள்ளனர்!
நாடு முழுவதும் உள்ள CBSE பள்ளிகளில் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் மார்ச் 29-ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 27 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
CBSE 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் CBSE-யின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான cbse.nic.in, cbseresults.nic.in ஆகியவற்றில் காணலாம். மேலும், மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வெளியான தேர்வு முடிவுகளின் படி கேரளா மாணவி ஒருவர் உள்பட 13 பேர் 500-க்கு 499 மதிப்பெண்கள் குவித்துள்ளனர்.
Bhavana N Sivadas from Kerala and 12 other students secured 499 out of 500 marks in #CBSE Class X examinations. #CBSE10thresult pic.twitter.com/9c1SqyuOMe
— ANI (@ANI) May 6, 2019
உங்கள் CBSE-10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது?
- தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்திற்கு செல்லும்
- முகப்பு பக்கத்தில், '10th Result 2019' இணைப்பை கிளிக் செய்யவும்.
- இணைப்பு திறந்தவுடன், பெயர் மற்றும் பதிவு எண் போன்ற விவரங்களை உள்ளிடவும்.
- தகவல்களை உள்ளிட்ட பிறகு 'Submit' பொத்தானை கிளிக் செய்யவும்.
- பின்னர் மாணவ/மாணவியரின் தேர்வு முடிவுகளின் மதிப்பெண் திரையில் காட்டப்படும்.
- அந்த பதிவை பிரதி அல்லது நகல் எடுத்துக்கொள்ளவும்.