உடல் பருமனை குறைப்பது அல்லது எடை அதிகரிப்பது என்பது தற்போதைய காலக்கட்டதில் சவாலாக மாறிவிட்டது. அதே நேரத்தில், பெரும்பாலான மக்கள் இன்று உடல் பருமன் மற்றும் கொழுப்பால் சிரமப்படுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், உடல் எடையை குறைக்க நாம் கடுமையான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். அத்துடன் பிடித்த உணவு மற்றும் பானங்களையும் நாம் கைவிட்டு விடுகிறோம். எனவே நீங்கள் ஆரோக்கியமான முறையில் எடை குறைக்க செய்ய விரும்பினால், தயிரை உணவில் சேர்த்துக்கொள்ளலுங்கள். தயிரைக் கொண்டு உடல் எடையை எப்படிக் குறைக்கலாம் என்பதை பார்ப்போம்.
எடை இழப்புக்கு தயிரின் நன்மைகள்-
1- தயிர் தொப்பை கொழுப்பை குறைக்க உதவுகிறது.
2- தயிரில் புரோபயாடிக்குகள் உள்ளன. இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்து, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.
3- வளர்சிதை மாற்றம் சரியாக வேலை செய்யும் போது, அது எடை இழப்புக்கு உதவுகிறது.
4- தயிரில் புரதமும் உள்ளது, இது உங்கள் வயிற்றை விரைவாக நிரப்பும் மற்றும் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.
மேலும் படிக்க | நீரிழிவு நோய்க்கு வரப்பிரசாதமாகும் 'இந்த' பழத்தின் விதைகளை தூக்கி எறியாதீர்கள்
உடல் எடையை குறைக்க இந்த வழியில் தயிரை உட்கொள்ளுங்கள்
பிளேன் தயிர்
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், உங்கள் உணவில் தயிரை சேர்த்துக்கொள்ளலாம். இதற்கு நீங்கள் ஒரு கிண்ணம் தயிர் எடுத்துக் கொள்ளுங்கள். காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவுடன் தயிரை சாப்பிடுங்கள். இதன் மூலம் நீங்கள் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கலாம் மற்றும் படிப்படியாக உங்கள் எடை குறைய ஆரம்பிக்கும்.
தயிர் மற்றும் உலர் பழங்கள்
நீங்கள் தயிரை மிகவும் ஆரோக்கியமானதாக மாற்ற விரும்பினால், அதில் நறுக்கிய உலர்ந்த பழங்களையும் சேர்க்கலாம். உலர் பழங்களை தயிரில் சேர்த்துக் கொண்டால், அது அதிக சத்தானதாகவும், உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் கிடைக்கும். இந்த கலவையை சாப்பிடுவதன் மூலம், உங்கள் வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும் மற்றும் உங்கள் எடையை குறைக்க முடியும்.
தயிர் மற்றும் கருப்பு மிளகு
சாதாரண தயிர் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், கருப்பு மிளகு சேர்த்து சாப்பிடலாம். உடல் எடையை குறைக்க கருமிளகை தயிருடன் கலந்து சாப்பிடலாம். இதற்கு நீங்கள் ஒரு கிண்ணம் தயிர் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் கருப்பு மிளகு தூள் சேர்க்கவும். இப்போது அதை சாப்பிடவும். கருப்பு மிளகு மற்றும் தயிர் இரண்டும் உங்கள் எடையைக் குறைக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
(துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Weight Loss Tips: இந்த இயற்கை பானத்தின் உதவியுடன் எடை குறைக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ