பிக்பாஸ் 8: வின்னர் முத்துவுக்கு 40 லட்சம்! ரன்னர் சௌந்தர்யாவுக்கு எத்தனை லட்சம்?

Bigg Boss 8 Tamil Runner Up Soundariya Prize Money : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் முத்துக்குமரன் டைட்டிலை வெல்ல, ரன்னர் அப் பட்டத்தை சௌந்தர்யா வென்றார். இதில், சௌந்தர்யாவிற்கு கிடைத்திருக்கும் பரிசுத்தொகை குறித்து இங்கு பார்ப்போம். 

Bigg Boss 8 Tamil Runner Up Soundariya Prize Money : ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளுள் ஒன்று, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி, சமீபத்தில் இறுதிப்போட்டி நடந்து முடிந்தது. இந்த நிலையில், இதில் முத்துக்குமரன் டைட்டிலை தட்டிச்சென்றார். மக்கள் மனதை வென்ற சௌந்தர்யா, இரண்டாம் இடம் பெற்றார். இதில், இருவருக்கும் கிடைத்துள்ள பரிசுத்தொகை குறித்து இங்கு பார்ப்போம். 

1 /7

105 நாட்களை கடந்த பிக்பாஸ் 8 நிகழ்ச்சி, ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. இதில், டாப் 5 இடங்களில் முத்துக்குமரன், சௌந்தர்யா, விஜே விஷால், ரயான் மற்றும் பவித்ரா ஆகியோர் இருந்தனர்.

2 /7

ஆரம்பத்தில் இருந்தே தனது விளையாட்டில் குறிக்கோளுடன் இருந்த முத்துக்குமரன், பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றுள்ளார். இவரது வெற்றி மக்களின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

3 /7

டைட்டில் வின்னரான முத்துக்குமரனுக்கு ரூ.40,50,000 பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேல், அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கான சம்பளமும் வழங்கப்படும் எனக்கூறப்படுகிறது. 

4 /7

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே மக்களை கவர்ந்த இன்னொரு போட்டியாளர் சௌந்தர்யா. எவிக்‌ஷனில் சிக்கினாலும், மக்கள் வாக்களித்ததால் இவர் காப்பாற்றப்பட்டு இறுதிப்போட்டி வரை வந்தார். 

5 /7

சௌந்தர்யா ரன்னர் அப் பட்டத்தை பெற்றது அவரது ரசிகர்களுக்கு வருத்தமளித்துள்ளது. இதனால், பலர் சமூக வலைதளங்களில் சௌந்தர்யா குறித்த பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

6 /7

சௌந்தர்யா, ரன்னர் அப் பட்டத்தை பெற்றதால், அவருக்கு பரிசுத்தொகை எதுவும் இல்லை எனக்கூறப்படுகிறது. ஆனால், இவரது சம்பள தொகையை மொத்தமாக பெற்றதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

7 /7

சௌந்தர்யா, ஒரு எபிசோடுக்கு சுமார் ரூ.10,000 சம்பளமாக பெற்றாராம். இதன்படி, மொத்தமாக ரூ.10.5 லட்சத்தை அவர் வீட்டிற்கு எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.