கம்முன்னு கம்பு சாப்பிட்டா, டாக்டர்கிட்டயே போக வேண்டாம்! கம்பு: அ முதல் .'. வரை...

Millets Healthy Food: அரிசி, கோதுமை போன்ற உணவுகளே பல காலமாக நமது தினசரி உணவில் இடம் பிடித்து வந்த நிலையில், தற்போது ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு கம்பு பலவிதங்களிலும் உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 16, 2023, 09:30 PM IST
  • பெண்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு
  • சிறுதானியங்களின் ராணி
  • முத்தான வாழ்க்கைக்கு சத்தான உணவு
கம்முன்னு கம்பு சாப்பிட்டா, டாக்டர்கிட்டயே போக வேண்டாம்! கம்பு: அ முதல் .'. வரை... title=

அரிசி, கோதுமை போன்ற உணவுகளே பல காலமாக நமது தினசரி உணவில் இடம் பிடித்து வந்த நிலையில், தற்போது ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு கம்பு பலவிதங்களிலும் உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. சிறு தானியங்களும் மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப்படும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள். சிறுதானியங்களில் ஒன்று கம்பு. இந்த கம்பு தரும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

சத்துக்கள்

கம்பில் உள்ள அதிக அளவிலான புரத சத்து, உடலிற்கு வலுவளித்து ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. 100 கிராம் கம்பில் கிட்டத்தட்ட 15 கிராம் அளவிற்கு புரத சத்துக்கள் நிறைந்துள்ளது. புரதச்சத்து இந்த அளவு வேறு எந்த தானியத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

குறைந்த அளவு கொழுப்பு கொண்ட கம்பை, பலவிதங்களிலும் சமைக்கலாம். தோசை, பனியாரம் என விதவிதமாய் பலகாரமாய் உண்டாலும், பாரம்பரியமாய் செய்யப்படும், கம்மங்கூழ், புட்டு, ரொட்டி, அவல் ஆகியவை எண்ணெயே இல்லாமல் சமைக்கப்படுபவை. இவை உடலுக்கு மிகவும் நன்மை பயப்பவை.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் கம்பை, தினசரி உணவில் சேர்த்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நார்ச்சத்து கொண்ட கம்பு, மலச்சிக்கலை சுத்தமாக போக்கி, ஆரோக்கியமான உடலைக் கொடுத்து இரும்பு போல உறுதியாக்கும். 

மேலும் படிக்க | இந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா? இது ஆரோக்கிய கார்னர்

உடல் எடை குறைப்பில் கம்பு

கம்பில் நார்ச்சத்து அதிகம் என்பதோடு, கொழுப்பு சத்து குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து, உடல் எடையை  கட்டுக்குள் வைக்கும் என்பதால், உடல் எடையினை குறைக்க விரும்புவார்கள் கம்பு என்ற சிறுதானியத்தை, தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. 

உடலை குளிர்ச்சியாக்கும் கம்பு

இன்று நமக்குக் உடல் சூடு பிரச்சனை மிகவும் பெரியதாக இருக்கிறது. பல்வேறு நோய்கள் ஏற்படவும் காரணமாக இருப்பது உடல் சூடு என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, சிறு தானியங்களின் தலைவன் என்று கூறப்படும் கம்பை தினசரி இல்லை என்றாலும், வாரத்திற்கு நான்கு முறையாவது எடுத்துக் கொண்டால், உடல் ஆரோக்கியம் மேம்படும், உடலில் மெருகு கூடும்.

குறைந்த அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் (glycemic index) கொண்ட கம்பை தொடர்ந்து பயன்படுத்தினால், நீரிழிவு நோய் ஏற்படாமல் பாதுகாக்கலாம். 

கருவுற்ற பெண்களும், பிரசவமான இளம் தாய்மார்களும் கம்பை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் பலவீனம் போகும். அதோடு, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கம்பு, தாய்ப்பால் சுரக்க நல்ல ஊட்டத்தைக் கொடுக்கும். சத்துமிகுந்த ஆகாரங்கள் என்ற பட்டியலில் முதலில் உள்ள கம்பு, ஆற்றல் மிகுந்த சத்துகளை கொண்டிருப்பதால் தாய்க்கும் சேய்க்கும் நல்ல உணவாக இருக்கும்.

மேலும் படிக்க | அனுஷ்காவின் பளபள தேகத்திற்கு இதுதான் காரணமா..? வெளியானது ஸ்கின் கேர் சீக்ரட்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News