இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். மக்கள் தங்கள் உடல் எடையை பராமரிக்க பல வழிகளை பின்பற்றுகிறார்கள். உடல் எடையைக் குறைக்க, ஜிம்மில் மணிக்கணக்கில் செலவிடுகிறார்கள், டயட்டில் இருக்கிறார்கள். இருப்பினும், பல சமயங்களில், இவற்றாலும் எந்த நல்ல பலனையும் பெறுவதில்லை. எனினும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் நாம் நம் உடல் எடையை குறைக்கலாம்.
ஒவ்வொரு ஆண்டையும் போலவே 2023 ஆம் ஆண்டின் துவக்கத்திலும், பலர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதை ஆண்டின் இலக்காக வைத்துள்ளனர். நீங்களும் அவர்களில் ஒருவராக இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.
நம் சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் சில பொருட்களைப் உபயோகித்து உடலின் கொழுப்பு மற்றும் கலோரிகளை எரித்து உங்கள் எடையைக் குறைக்கலாம்.
1. கடுகு எண்ணெய்
உடல் கொழுப்பை குறைக்க கடுகு எண்ணெயை பயன்படுத்தலாம். இந்த எண்ணெயில் நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ளது. உடல் எடையை குறைக்க கடுகு எண்ணெய் பயன்படுத்த வேண்டும். கடுகு எண்ணெயில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. உடலில் உள்ள கலோரிகளை எரிக்கவும், எடையைக் குறைக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும்.
2. மஞ்சள்
மஞ்சளில் கொழுப்பை எரிக்கும் தன்மை உள்ளது. மஞ்சள் உடல் கொழுப்பைக் குறைப்பதோடு, கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.
மேலும் படிக்க | வெல்லம் கலந்த காபி ‘சுகர் ப்ரீ’ காபியா... நிபுணர்கள் கூறுவது என்ன!
3. பூண்டு
பூண்டு எடையைக் குறைக்கவும் உதவுகிறது. பூண்டு சாப்பிட்டால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். அதனால் பசி குறைவாக இருக்கும். பூண்டில் அல்லிசின் என்ற பொருள் உள்ளது. இது கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொழுப்பை உடலில் இருந்து நீக்குகிறது.
4. மோர்
மோரில் 99 கலோரிகள் மற்றும் 2.2 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளது. மோர் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. மோர் கொழுப்பு மற்றும் கலோரிகளைத் தவிர அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
5. தேன்
தேனை உட்கொள்வது உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் தேனில் காணப்படுகின்றன. இவை கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பை குறைக்க பெரிதும் உதவுகின்றன.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளியா நீங்கள்? இப்படி செய்தால் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கலாம்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ