உடல் எடையை குறைக்கணுமா? இந்த பழங்களை சாப்பிட்டால் போதும்

Best Fruits To Aid Weight Loss: சில பழங்களின் உதவியுடன் எளிதாக உடல் எடையை குறைக்க முடியும். உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 29, 2022, 02:47 PM IST
  • இந்த பழங்கள் எடை குறைக்க உதவும்.
  • இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
  • உடனடியாக எடை குறையும்.
உடல் எடையை குறைக்கணுமா? இந்த பழங்களை சாப்பிட்டால் போதும் title=

பழங்களை சாப்பிடுவது எப்போதும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். பழங்கள் உடலுக்குத்  தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன. பழங்களிலிருந்து நமக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துகள் காரணமாக நம் உடலில் எப்போதும் புத்துணர்ச்சி இருக்கிறது. 

சில பழங்கள் நமது உடல் எடை குறைப்புக்கும் காரணமாக உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? எடை குறைப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் சில பழங்களை தங்களின் சிறந்த நண்பர்களாக்கிக் கொள்வது நல்லது. இவற்றின் உதவியுடன் எளிதாக உடல் எடையை குறைக்க முடியும். உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். 

உடல் எடை குறைப்பு: பம்பளிமாஸ் பழம் எடை குறைக்க உதவும்
முதலில் ஆரஞ்சு பழம் போல் இருக்கும் பம்பளிமாஸ் பழம் பற்றி பார்க்கலாம். ஆரோக்கிய நிபுணர்களின் படி, பம்பளிமாஸ் பழம் சாப்பிடுவது உங்கள் எடையைக் குறைக்கும். எனினும், இந்த பழத்தை பற்றி பலருக்குத்  தெரிவதில்லை. இதை நீங்களும் இதுவரை சாப்பிட்டது இல்லை என்றால், உடனடியாக உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். உது உங்கள் உடல் எடையை குறைக்க பெரிய அளவில் உதவும். 

உடல் எடை குறைப்பு: ஆப்பிள் சாப்பிட்டால் உடல் எடையும் குறையும்
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது என்ற கூற்று உள்ளது. அது உமைதான்!! ஆப்பிளிலும் கலோரிகள் குறைவாக உள்ளன. ஆப்பிள் பழம் எடை இழப்புக்கு உதவியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Sleep vs Belly Fat: தொப்பையில்லா அழகு வேண்டுமா? உறக்கமும் கண்களை தழுவட்டுமே... 

ஆப்பிளில் சுமார் 110 கலோரிகள் இருக்கின்றன. இது உடலுக்கு ஆண்டி ஆக்சிடெண்டுகளை வழங்குகிறது. ஆப்பிள் பழம் உங்கள் ஆரோக்கியத்திலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆப்பிள் உடலில் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.

உடல் எடை குறைப்பு: உணவில் பெர்ரி பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள், உடல் எடை குறையும்

பெர்ரி சாப்பிடுவதன் மூலமும் உடல் எடையைக் குறைக்கலாம். உங்கள் உணவில் தினமும் அரை கப் பெர்ரி சேர்த்துக்கொண்டால், அது உங்களுக்கு 42 கலோரிகளை வழங்குகிறது. இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இது உடலில் சுமார் 12 சதவீதம் வைட்டமின்-சி மற்றும் மாங்கனீசை வழங்குகிறது.

உடல் எடை குறைப்பு: கிவி பழம் உடல் எடையை குறைக்கும் 

கிவி பழம் உடல் எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது. இது ஊட்டச்சத்து நிறைந்த பழமாக கருதப்படுகின்றது. இந்த பழத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.) 

மேலும் படிக்க | மூட்டு வலி முதல் நீரிழிவு நோய் வரை: கற்பூரவல்லியின் அற்புத நன்மைகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News