Weight Loss: சட்டுனு அதிகரிச்ச எடை பட்டுனு குறையும், இதை மட்டும் செஞ்சு பாருங்க

Weight loss by lemon Water: எலுமிச்சை நீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்ல பானமாக கருதப்படுகிறது. ஆனால், இதனால் உடல் எடையும் குறையுமா? 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 19, 2022, 03:40 PM IST
  • உடல் எடை குறையணுமா?
  • எலுமிச்சை நீர் அதில் உங்களுக்கு உதவும்.
  • எலுமிச்சைப் பழத்தில் மற்ற பானங்களை விட குறைவான கலோரிகள் உள்ளன.
Weight Loss: சட்டுனு அதிகரிச்ச எடை பட்டுனு குறையும், இதை மட்டும் செஞ்சு பாருங்க title=

எலுமிச்சை சாறு எடை குறைக்க உதவுமா: கோடை காலத்தில் எலுமிச்சை சாறு சிறந்த புத்துணர்ச்சியூட்டும் பானமாக கருதப்படுகிறது. எலுமிச்சைப்பழத்தின் சாறு நல்ல சுவையுடன் இருப்பதோடு, அது உங்கள் உடல் சோர்வையும் நீக்குகிறது. இது தவிர, இதை உட்கொள்வதால், செரிமானம் சரியாக இருப்பதுடன், ஆற்றலும் அதிகரிக்கிறது. எலுமிச்சை நீரை உட்கொள்வது எடையைக் குறைக்க உதவும் என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். உண்மையில், அப்படி நடக்குமா? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

எலுமிச்சை தண்ணீர் உடல் எடையை குறைக்குமா?

ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாப்பிடுவது அதிக பலன்களைத் தரும் என்று பல அறிக்கைகள் கூறுகின்றன. நீங்கள் கடைகளில் கிடைக்கும் மற்ற பானங்களுக்கு பதிலாக, எலுமிச்சைப் பழ சாரை குடித்தால், உடலில் கலோரி உட்கொள்ளல் மிகவும் குறைவாக இருக்கும். இது எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.

உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்

எடையைக் குறைப்பதோடு, உடலை நீரேற்றமாக வைத்திருப்பதில் எலுமிச்சை நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எலுமிச்சம்பழம் உடலில் நீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் என்று நம்பப்படுகிறது. மேலும் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பையும் இது குறைக்கிறது.

மேலும் படிக்க | Summer Drink: உடல் வெப்பத்தைத் தணிக்க இந்த கோடைக்கால பானங்களை குடியுங்கள் 

வளர்சிதை மாற்றம் சிறப்பாக செயல்படுகிறது

எலுமிச்சை நீரை உட்கொள்வதன் மூலம் வளர்சிதை மாற்றம் சிறப்பாக செயல்படுகிறது என்பது பல ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. எப்போதும் பசி எடுப்பது போன்ற உணர்வு உங்களுக்கு இருக்காது. இதனால், தேவை இல்லாத உணவுகள் உட்கொள்வதை தடுக்கலாம். இதன் காரணமாக இது எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

எலுமிச்சை நீர் மூலம் எடை குறைய காரணம் என்ன? 

மற்ற பானங்களுடன் ஒப்பிடும்போது எலுமிச்சைப் பழ நிரை குடிக்கும்போது, ​​​​அதிலிருந்து அதிக நன்மைகளைப் பெற முடிகிறது. ஏனென்றால் எலுமிச்சைப் பழத்தில் மற்ற பானங்களை விட குறைவான கலோரிகள் உள்ளன. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது, உடலை ஹைட்ரேட் செய்கிறது. இதன் காரணமாக ஜூஸ் அல்லது மற்ற உயர் கலோரி பானங்களுடன் ஒப்பிடும்போது எடை அதிகரிப்பதை இது வெகுவாக தடுக்கிறது. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை உறுதி செய்வதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 3 மாதத்தில் தொப்பை கொழுப்பை குறைக்க இதை செய்தால் போதும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News