உடல் எடையை குறைக்க சிறந்த வழி: உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் பிற வாழ்க்கை முறைக் கோளாறுகளைத் தவிர்க்க ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். நமது உடலுக்கு அனைத்து சத்துகளும் கண்டிப்பாக சரியான அளவில் தேவை. அதேபோல், குறைந்த அளவு கலோரி உட்கொள்ளலும் உடலுக்கு அவசியம். நாம் நாள் முழுவதும் கலோரி நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உடல் தேவைக்கு அதிகமான கலோரிகளை சேமித்து வைக்கிறது. மேலும் நாள் முழுவதும் எவ்வளவு கலோரிகளை நாம் எடுத்துக்கொள்கிறோமோ அவ்வளவு கலோரிகளை நாம் எரிக்க வேண்டும். ஆனால் இதைச் செய்யாவிட்டால், கூடுதல் கலோரிகள் உடலில் கொழுப்பு வடிவில் சேமிக்கப்படும். இதன் காரணமாக உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகின்றது. அதே போல் உடல் பருமன் பல்வேறு வாழ்க்கை முறை கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
எடையை குறைக்க விட்டில் இருக்க வேண்டிய பொருட்கள்:
நீங்களும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டு, உங்கள் எடையை குறைக்க நினைத்தால், உங்களது சில விஷயங்களில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும். எப்போதும் உங்கள் வீட்டில் சில ஆரோக்கியமான பொருட்களை வைத்து அவற்றை தினமும் உட்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். இதன் மூலமாக நீங்கள் ஆரோக்கியமற்ற, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சில உணவுப் பொருட்களை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. இவ்வாறு செய்வதன் மூலம் அதிகரிக்கும் உங்கள் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். உடல் எடையை குறைக்க, உங்கள் வீட்டில் நீங்கள் எப்போதும் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய பொருட்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் எடையை குறைக்க இந்த பொருட்களை எப்போதும் வீட்டில் வைத்திருங்கள்:
முட்டைகள்
முட்டை சாப்பிடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்படி என்றால், இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். முட்டையை உட்கொள்வதன் மூலம் உங்கள் எடையை எளிதாக குறைக்கலாம். இதற்கு நீங்கள் எப்போதும் வீட்டில் முட்டை வைத்திருக்க வேண்டும். முட்டையை உட்கொள்வதன் மூலம், வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் உடல் எடையை குறைக்கும் உங்கள் முயற்சியில் பெரும் உதவி கிடைக்கின்றது. முட்டையை உட்கொள்வதன் மூலம், உங்கள் வயிறு நிரம்பி இருக்கிறது. மேலும், பசி எடுக்கும்போது ஆரோக்கியமற்ற, உடலுக்கு தேவையற்ற, எடையை அதிகரிக்கக்கூடிய உணவுகளை உண்பதும் தவிர்க்கப்படுகின்றது.
பச்சை காய்கறிகள் / கீரை வகைகள்
உடல் எடையைக் குறைக்க, பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை எப்போதும் வீட்டில் வைத்திருப்பது நல்லதாகும். ஏனெனில் இவற்றை உட்கொள்வதன் மூலம் எடையை எளிதில் குறைக்கலாம். இதற்கு பீன்ஸ், காளான். கீரை வகைகள் போன்றவற்றை வீட்டில் வைத்து, அவ்வப்போது கறி, சூப் அல்லது சாலட் செய்து உட்கொள்ளலாம். இவை அனைத்திலும் கலோரிகள் குறைவாக இருப்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். இதனால் எடை எளிதில் குறையும்.
மேலும் படிக்க | கல்யாண முருங்கையின் சூப் குடித்தால் மலட்டு தன்மை போகும்..!
டார்க் சாக்லேட்:
உங்கள் எடையை குறைக்க விரும்பினால், நீங்கள் டார்க் சாக்லேட்டையும் உட்கொள்ளலாம். டார்க் சாக்லேட்டை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவுகிறது என்பது பலருக்கு ஆச்சரியம் அளிக்கும், ஆனால் அது உண்மை. ஏனெனில் அதை சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். எனினும், இதை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பழங்கள்:
பொதுவாகவே, எப்போதும் பல வித பழங்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும். ஏனென்றால், பழம் இனிப்பு உணவுக்கான ஏக்கத்தைத் தடுக்கிறது. ஆம், திடீரென சிலருக்கு இனிப்புகளை சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகின்ரது. அப்படிப்பட்டவர்கள் அந்த ஏக்கத்தை போக்கிக்கொள்ள பழங்களை உட்கொள்ளலாம். பழங்கள் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, நம் உடலுக்கு எந்த வித தீங்கையும் விளைவிக்காது. எடையை குறைக்க விரும்புபவர்கள் அதிக பழங்களை உட்கொள்வது மிக நல்லது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கஷ்டப்படாமல், இஷ்டப்பட்டே உடல் எடையையும், தொந்தியையும் குறைக்க 8 டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ