சர்க்கரை நோய் - இதய நோய் ஆபத்தை அதிகரிக்கும் சில உணவுகள்... எச்சரிக்கும் ICMR

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் சென்னையின் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில், குறைந்த வெப்பத்தில் நீண்ட நேரம் சமைக்கப்பட்ட உணவு நீரிழிவு அபாயத்தைக் குறைப்பதில் மிகவும் உதவிகரமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 9, 2024, 11:55 AM IST
  • ICMR நடத்திய ஆய்வில் 25 முதல் 45 வயதுக்குட்பட்ட உடல் பருமன் கொண்ட 38 பேர் பங்கேற்றனர்.
  • நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும் சில உணவுகள்.
  • நீரிழிவு அபாயத்தைக் குறைக்க சாத்தியமான தீர்வு கண்டறியப்பட்டுள்ளது.
சர்க்கரை நோய் - இதய நோய் ஆபத்தை அதிகரிக்கும் சில உணவுகள்... எச்சரிக்கும் ICMR title=

இந்தியாவை உலகின் நீரிழிவு தலைநகரம் என்று அழைக்கும் அளவிற்கு, 10 கோடிக்கும் அதிகமான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கடுமையான சிக்கலை தீர்க்கும் வழிகளை ஆராயும் நோக்கில், ஆய்வு ஒன்று சமீபத்தில் நடத்தப்பட்டது. நீரிழிவு அபாயத்தைக் குறைக்க சாத்தியமான தீர்வு இதன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் சென்னையின் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில், குறைந்த வெப்பத்தில் நீண்ட நேரம் சமைக்கப்பட்ட உணவு நீரிழிவு அபாயத்தைக் குறைப்பதில் மிகவும் உதவிகரமாக (Health Tips) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ICMR நடத்திய ஆய்வில் 25 முதல் 45 வயதுக்குட்பட்ட உடல் பருமன் கொண்ட 38 பேர் பங்கேற்றனர், அவர்களின் உடல் நிறை குறியீட்டெண் (BMI) 23 அல்லது அதற்கும் அதிகமாக இருந்தது. ஆய்வின் போது, ​​பங்கேற்பாளர்களுக்கு 12 வாரங்களுக்கு இரண்டு வகையான உணவுகள் வழங்கப்பட்டன.
 
1. ஒன்று அதிக வெப்ப நிலையில் குறைந்த நேரம் சமைக்கப்பட்ட உணவுகள்

2. மற்றொன்று குறைந்த வெப்பத்தில் அதிக நேரம் சமைக்கப்பட்ட உணவு. 

குறைந்த வெப்பத்தில் அதிக நேரம் சமைக்கப்பட்ட உணவு ஆய்வில் பங்கேற்பாளர்களின் இன்சுலின் உணர்திறனை கணிசமாக மேம்படுத்தியது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த டயட் முறையை பின்பற்றியபங்கேற்பாளர்களின் இரத்தத்தில் (Advanced Glycation End Products - AGEs) என்னும் கூறுகள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. AGEs என்னும் கூறுகள் நீரிழிவு, இருதய நோய், அல்சைமர் நோய், கல்லீரல் நோய், மூட்டுவலி, சிறுநீரக செயலிழப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தும் அழற்சி பண்புகளை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் அதிக வெப்ப நிலையில் குறைந்த நேரம் சமைக்கப்பட்ட உணவை எடுத்துக் கொண்ட பங்கேற்பாளர்களின் ரத்தத்தில் AGEs என்னும் கூறுகள் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் படிக்க | நரம்பு மண்டலம் - எலும்புகளை பாதிக்கும் மெக்னீசியம் குறைபாடு... அறிகுறிகளும்... சாப்பிட வேண்டிய உணவுகளும்

AGEs என்றால் என்ன?

AGEs என்பது சில உணவுகள் அதிக வெப்பநிலையில் சமைக்கப்படும் போது உருவாகும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள், குறிப்பாக வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் இதில் அடங்கும். இந்த கூறுகள் உடலில் வீக்கம், இன்சுலின் எதிர்ப்பு போன்ற பிற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். முக்கியமாக நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.

 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும் உணவுகள்

1. வறுத்த உணவுகள்: சிப்ஸ், ஃபிரைடு சிக்கன், சமோசா, பக்கோடா

2. பேக் செய்யப்பட்ட பொருட்கள்: குக்கீகள், கேக்குகள், 

3. பதப்படுத்தப்பட்ட உணவுகள்: நெடி டு ஈட் உணவுகள், மயோனைஸ், உறைய வைக்கப்பட்ட உணவுகள்

4. அதிக வெப்பநிலையில் சமைக்கப்படும் இறைச்சி உணவுகள்: பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, கோழி போன்ற வறுக்கப்பட்ட அல்லது வறுத்த இறைச்சிகள்

5. வறுத்த கொட்டைகள் உலர்பழங்கள்: வறுத்த பாதம், வருத்த முந்திரி, வறுத்த அக்ரூட் பருப்புகள், சூரியகாந்தி விதைகள்

சமையல் முறைகளான வறுத்தல், பொரித்தல், பதப்படுத்துதல் மற்றும் பேக்கிங் போன்றவை உணவுகள் நீண்ட கால கெட்டுப் போகாமல் இருக்க உதவுகின்றன . பதப்படுத்தப்பட்ட மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பதன் மூலமும், பிரெஷ்ஷாக தயாரிக்கப்பட்ட, ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலமும் நீரிழிவு நோயின் அபாயத்தை பெருமளவு குறைக்க முடியும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

மேலும் படிக்க | எச்சரிக்கை! முள்ளங்கியுடன் சாப்பிடக் கூடாத சில உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News