Omicron Alert: கண்கள் காட்டும் இந்த முக்கிய அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்!!

Omicron Symptoms: கொரோனா காலத்தில், கண்களில் தெரியும் எந்த அறிகுறிகளையும் புறக்கணிக்கக்கூடாது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 4, 2022, 11:13 PM IST
  • தற்போது கொரோனாவின் வடிவம் மாறி வரும் நிலையில், அதன் அறிகுறிகளும் மாறி வருகின்றன.
  • கொரோனாவின் அறிகுறிகள் குறித்து ஒவ்வொரு நாளும் புதிய ஆராய்ச்சிகள் நடக்கின்றன.
  • ஒமிக்ரான் கான்ஜுன்க்டிவிடிஸையும் ஏற்படுத்தும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
Omicron Alert: கண்கள் காட்டும் இந்த முக்கிய அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்!!  title=

Omicron Symptoms: கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தொடக்கத்தில், கோவிட்-19 இன் மூன்று முக்கிய அறிகுறிகள் மட்டுமே இருந்தன. அதிக காய்ச்சல், தொடர் இருமல் மற்றும் வாசனை அல்லது சுவை இழப்பு ஆகியவை கொரோனாவின் அந்த மூன்று அறிகுறிகள் ஆகும். எனினும், தற்போது கொரோனாவின் வடிவம் மாறி வரும் நிலையில், அதன் அறிகுறிகளும் மாறி வருகின்றன. 

டெல்டா மற்றும் ஓமிக்ரான் (Omicron Variant) போன்ற வகைகளுக்குப் பிறகு, கொரோனாவின் அறிகுறிகள் வேகமாக மாறிவிட்டன. கொரோனாவின் அறிகுறிகள் குறித்து ஒவ்வொரு நாளும் புதிய ஆராய்ச்சிகள் நடக்கின்றன. மேலும் கொரோனாவின் பல்வெறு அறிகுறிகள் பற்றி சமூக ஊடகங்களிலும் பலவித கருத்துகள் கூறப்படுகின்றன.

ZOE கோவிட் ஆய்வு மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC), ஓமிக்ரானின் அறிகுறிகள் முதல் மாறுபாட்டைக் காட்டிலும் வேறுபட்டு இல்லை என்று நம்புகின்றன. அதாவது கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளை யாராவது உணர்ந்தால், அவர் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஓமிக்ரானின் முக்கிய அறிகுறிகளில் மூக்கு ஒழுகுதல் அல்லது அடைத்தல், சோர்வு, தலைவலி, தொடர் இருமல், மூச்சுத் திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம், தசை அல்லது உடல் வலி, சுவை அல்லது வாசனையின் இழப்பு, தொண்டை புண், குமட்டல் அல்லது வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை அடங்கும்.

மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல மருத்துவ நிறுவனங்கள், பொதுவான குளிர் காய்ச்சல் (Fever) போன்ற அறிகுறிகளுடன் ஏதேனும் விசித்திரமான அறிகுறிகளும் இருந்தால், அவர்கள் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். ஓமிக்ரான் மாறுபாட்டில் மிகவும் தீவிரமான விஷயம் என்னவென்றால், அது வேகமாக பரவி வருகிறது. மேலும் அதன் அறிகுறிகளும் அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸ் உடலின் பல பாகங்களை பாதித்து வருவதாக அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. ஒமிக்ரான் கான்ஜுன்க்டிவிடிஸ் (Conjunctivitis) போன்ற ஒரு நிலையையும் ஏற்படுத்தும் என்று ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

ALSO READ | Omicron புதிய அறிகுறிகள்: குணமடைந்தாலும் விடாது துரத்தும் பிரச்சனைகள்

கான்ஜுன்க்டிவிடிஸ் என்றால் என்ன?

கான்ஜுன்க்டிவிடிஸ், அதாவது கண்கள் சிவந்து போகும் பிரச்சனை, உங்கள் கண் இமைகளின் உட்புறத்தில் இருக்கும் கான்ஜுன்டிவா எனப்படும் மெல்லிய சவ்வில் ஏற்படும் வீக்கம் ஆகும். CDC மற்றும் WHO இதை ஓமிக்ரான் மாறுபாட்டின் அறிகுறியாக (Omicron Symptom) இன்னும் கருதவில்லை. ஆனால் இந்த அறிகுறி பல நோயாளிகளில் காணப்படுகிறது. பீட்டா மற்றும் டெல்டா வகைகளை விட ஓமிக்ரான் மாறுபாடு ACE-2 ஏற்பிகளுடன் பிணைக்கும் அதிகத் திறனைக் கொண்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே கான்ஜுன்க்டிவிடிஸ் ஓமிக்ரானின் அறிகுறியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஓமிக்ரான் எவ்வாறு கண்களை குறிவைக்கிறது?

வெண்படல அழற்சியின் அறிகுறிகள் அதாவது இளஞ்சிவப்பு கண்கள் கொரோனா நோயாளிகளிடம் காணப்படுகின்றன. இருப்பினும், வேறு பல காரணிகளும் இதற்கு காரணமாக இருக்கலாம். எனினும், இந்த அறிகுறி ஓமிக்ரான் நோயாளிகளிடமும் காணப்படக்கூடும் என்ற சந்தேகம் இருப்பதால், இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வது நல்லதாகும். 

கண்களில் காணப்படும் அறிகுறிகள் என்ன? 

கொரோனா காலத்தில், கண்களில் தெரியும் எந்த அறிகுறிகளையும் புறக்கணிக்கக்கூடாது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஓமிக்ரான் மிக வேகமாக மாறுகிறது, அதன் அறிகுறிகளும் மாறி வருகின்றன. கண்கள் தொடர்பான அறிகுறிகள் பல நோயாளிகளிடம் காணப்படுகின்றன. கண்கள் சிவந்து போதல், கண்களில் எரிச்சல் மற்றும் நீர் வடிதல், கண்களில் வலி, கண்களில் வீக்கம் போன்ற அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், நீங்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கு கான்ஜுன்க்டிவிடிஸ் இருந்தால் என்ன செய்வது?

கான்ஜுன்க்டிவிடிஸ் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், அடிக்கடி கண்களைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், சுத்தமான துண்டுகளை தினமும் பயன்படுத்த வேண்டும். யாருடனும் துண்டுகளை பகிர்ந்து கொள்ளக்கூடாது, உங்கள் தலையணை உறைகளை அடிக்கடி அடிக்கடி மாற்ற வேண்டும்.  இது தவிர எந்த விதமான கண் மையையும் கண்களில் தடவக்கூடாது. 

ALSO READ | ஓமிக்ரான் தொற்றா? சாதாரண காய்ச்சலா? எப்படி கண்டுபிடிப்பது?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News