உச்சி முதல் பாதம் வரை... பல நோய்களுக்கு அருமருந்தாகும் நொச்சி இலை!

நொச்சி செடியின் இலை மட்டுமல்ல, பூக்கள் விதை  வேர், என் அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. நொச்சி இலை என்னும் மூலிகை உச்சி முதல் பாதம் வரை பல்வேறு நோய்களுக்கான தீர்வை தருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 19, 2023, 10:12 AM IST
  • நொச்சி இலை என்னும் மூலிகை உச்சி முதல் பாதம் வரை பல்வேறு நோய்களுக்கான தீர்வை தருகிறது.
  • நொச்சி இலை சுவாசப்பாதையை சீராக்குகிறது.
  • அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ள நொச்சி இலை மூட்டு வலியை குணப்படுத்த மிகவும் சிறந்தது.
உச்சி முதல் பாதம் வரை... பல நோய்களுக்கு அருமருந்தாகும் நொச்சி இலை! title=

நொச்சி இலை ஆயுர்வேதத்தில் மிகச்சிறந்த மூலிகையாக கருதப்படுகிறது. குறு மரமாக வளரும் தன்மை கொண்ட நொச்சி இலை, உச்சி முதல் பாதம் வரை பல்வேறு நோய்களுக்கான தீர்வை வழங்கி வருகிறது. நொச்சி இலையை ஆடு மாடுகள் உள்ளிட்ட விலங்குகள் காது என்பது குறிப்பிடத்தக்கது. நொச்சி செடியின் இலை மட்டுமல்ல, பூக்கள் விதை  வேர், என் அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. நொச்சி இலை என்னும் மூலிகை உச்சி முதல் பாதம் வரை பல்வேறு நோய்களுக்கான தீர்வை தருகிறது. 

வியக்க வைக்கும் மருத்துவ குணங்கள்

தலைவலி

தலைவலி நொச்சி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனை ஆவி பிடித்து வந்தால், தலைவலி நீங்கும். மேலும், சளித்தொல்லை ஜலதோஷம் தலைபாரம் உள்ளிட்ட பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

கழுத்து வலி

நல்லெண்ணையில் நொச்சி இலை போட்டு காய்ச்சி, அதனை தலைக்கு தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால், கழுத்து வலி முதுகு வலியால் அவதிப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணத்தை தரும். அது விடு உடலில் எந்த பகுதியில் அடிபட்டாலும் நொச்சி இலை போட்டு காய்ச்சி நீரால் ஒத்தடம் தர வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். நரம்பு கோளாறுகள் காரணமாக கழுத்து வலியினால் அவதிப்பட்டு வந்தால் இந்த சிகிச்சை நல்ல பலன் அளிக்கும்

தூக்கமின்மை

தூக்கமின்மை பிரச்சனையை சந்திப்பவர்கள் நொச்சி இலைகளை பறித்து துணியில் கட்டி தலையணை போல் வைத்துக் கொண்டு படுத்தால் தூக்கமே பிரச்சனை நீங்கும். நொச்சி இலை பச்சையாகவும் அல்லது உலர்த்தியோ பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க | சைவம் சாப்பிடுபவரா நீங்கள்..? உங்களுக்கேற்ற டயட் டிப்ஸ்-இதோ..!

சரும பிரச்சனை

சரும பிரச்சனைகளுக்கும் நொச்சி இலை சிறந்த தீர்வாக அமைகிறது. தேமல் உள்ள இடங்களில் நொச்சி இலை சாற்றை பூசி வந்தால் பலன் கிடைக்கும். நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாறு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது.

நுரையீரலை வலுவாக்கும் நொச்சி இலை

நொச்சி இலை சுவாசப்பாதையை சீராக்குகிறது. சனித் தொல்லை, ஜலதோஷம் தலைவலி ஆகியவற்றை நீக்கி நுரையீரலை வலுவாக்குகிறது. இதற்கு நொச்சி இலையில் நீரில் போட்டு தொதிக்க வைத்து ஆவி பிடித்தால் போதும். நொச்சி இலைகளில் ஒருவித நறுமண வாசனையுண்டு. அவைதான் சுவாசப்பாதையை சீராக்கி நன்மை அளிக்கிறது. 

மூட்டு வலிக்கு மருந்தாகும் நொச்சி

அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ள நொச்சி இலை மூட்டு வலியை குணப்படுத்த மிகவும் சிறந்தது. நொச்சி இலை நீரில் குளிப்பது மூட்டு வலிக்கு நிவாரணம் தரும். நொச்சி இலையை கசக்கி துணியில் துணியில் வைத்து வலி உள்ள இடங்களில் கட்டி வைத்தால் வலி குறைய தொடங்கும்.

வயிற்றுப் பிரச்சனை

வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருந்தாலும் நொச்சி இலை நல்ல பலன் தரும். வயிற்றில் உள்ள பூச்சிகளை கொள்ளும் தன்மை கொண்டது நொச்சி இலை. இதனைப் பாம்பு கடிக்கு விஷமுறிவு மருந்தாக பயன்படுத்தலாம்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த கருப்பு உளுந்து அற்புதம்! வாரத்தில 3 நாள் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News