Low calorie & Fibre Rich Foods for Weight Loss: நவீன யுக வாழ்க்கை முறையின் பரிசாக, நமக்கு கிடைத்துள்ளது உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் என அதன் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இதில் உடல் பருமன் என்பது பல நோய்களுக்கான காரணமாக அமைந்து விடுகிறது. இதனை குறைத்தாலே, சுமார் 90 சதவிகித நோய்களிலிருந்து நாம் விடுபடலாம். உடல் பருமனை குறைக்க, டயட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
உடல் பருமனை குறைக்கும் கலோரி குறைவான நார்ச்சத்து மிக்க உணவுகள்
உடல் பருமனை குறைக்க புரதம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல குறைந்த கலோரி கொண்ட நார்ச்சத்து மிக்க உணவுகளும் மிகவும் முக்கியம். நார்ச்சத்து, நமது செரிமான அமைப்பை வலுவாக்கி, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. அதோடு கொழுப்பு கரைய பெருமளவு உதவுகிறது. அதோடு மட்டுமல்லாமல், இவை கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கும் அவசியம். நமது உடலுக்கு தினசரி 25 -30 கிராம் நார்ச்சத்து தேவை என்கின்றனர் நிபுணர்கள். இந்நிலையில், குறைவான அளவு கலோரி கொண்ட, அதே சமயத்தில் நார்ச்சத்து நிறைந்த சில உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ப்ரோக்கோலி
ஒரு கோப்பை சமைத்த புரோக்களியில், சுமார் 5 கிராம் நார்ச்சத்து இருப்பதாக உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இதில் போலேட் சத்து நிறைந்துள்ளது. நார்ச்சத்தை தவிர, இதில் விட்டமின் சி மற்றும் கே உள்ளது. கலோரி அளவு என்று எடுத்துக் கொண்டால், இதில் 55 கலோரிகள் மட்டுமே உள்ளன. ப்ரோக்கிலியை சமைக்கும் போது, அளவுக்கு அதிகமாக வேக வைக்க கூடாது என்பதை நினைவில் கொள்ளவும். அளவிற்கு அதிகமாக வேகவைக்கும் போது அதில் உள்ள சத்தை நாம் இழந்து விடுவோம்.
கீரை
கீரை பச்சை காய்கறிகளிலேயே, மிகச் சிறந்தது. இரும்புச்சத்து நிறைந்த கீரை பல வகையில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக் கூடியது. இதில் இரும்பு சத்து மட்டுமல்லாது, வைட்டமின் ஏ மற்றும் கே, போலேட் ஆகியவை உள்ளது. ஒரு கப் சமைத்த கீரையில், 4 கிராம் நார்ச்சத்து இருப்பதாகவும், 40 கிராம் கலோரிகள் இருப்பதாகவும், உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கேரட்
கேரட் என்ற உடனே நமது நினைவுக்கு வருவது, அது கண்களைப் பாதுகாக்கும் சிறந்த உணவு என்பதுதான். பீட்டா கரோட்டின், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த கேரட் கண்களை பாதுகாப்பதில் முக்கியத்துவம் வகிக்கிறது என்றாலும், குறைந்த கலோரி உள்ள நார்ச்சத்து மிக்க உணவு என்று பலருக்கு தெரிவதில்லை. ஒரு கப் சமைத்த கேரட்டில் மூன்று. ஐந்து கிராம் நாசத்து ஒழுகுவது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். சமைத்த ஒரு கோப்பை கேரட்டில் 50 கலோரிகள் மட்டுமே உள்ளது.
முட்டைக்கோஸ்
ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுஸ் என்று அழைக்கப்படும் இந்த முட்டைக்கோஸின் முக்கியத்துவம் பற்றி நம்மில் பலருக்கு தெரிவதில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் ஜீரண சக்தியை அதிகரிப்பது வரை இதில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். ஒரு கப் சமைத்த முட்டைக்கோஸில் சுமார் 2 கிராம் நார்ச்சத்து உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். இது தவிர இதில் வைட்டமின் சி மற்றும் கே அதிகம் உள்ளது.
உடல் பருமனை குறைக்க, மேலே குறிப்பிட்டுள்ள, குறைந்த கலோரி கொண்ட அதே சமயத்தில் அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகளை, காலை மாலை இரவு என, ஏதேனும் ஒரு காய்கறியை, உணவில் சேர்த்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டால், நல்ல பலனை காணலாம். அதோடு உணவில், மற்றும் கோதுமையின் அளவை குறைத்துக் கொண்டு, காய்கறிகளின் அளவை கூட்டுவதால் ஒரு மாதத்திலேயே பலன் தெரியும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சாத்துக்குடி ஜூஸை தினமும் குடித்தால் - என்னென்ன பலன்கள்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ