வேகமாக தொப்பை கொழுப்பை விரட்டி அடிக்கும் வெயிட் லாஸ் மேஜிக் காம்போ!!

Weight Loss Tips: உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் நபர்களில் நீங்களும் ஒருவரா? ஆம் என்றால், பிடிவாதமான தொப்பை கொழுப்பை அகற்றுவது எவ்வளவு கடினம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 9, 2023, 09:19 PM IST
  • வெந்தயத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது தொப்பையை குறைக்க உதவும்.
  • வெந்தய விதைகளுடன், அதன் விதைப் பொடியையும் உட்கொள்ளலாம்.
  • இதை எப்படி சாப்பிட்டாலும் பலன் தரும்.
வேகமாக தொப்பை கொழுப்பை விரட்டி அடிக்கும் வெயிட் லாஸ் மேஜிக் காம்போ!! title=

Weight Loss Tips: உடல் பருமன் பொதுவாக ஒரு நோயாக கருதப்படுவதில்லை. ஆனால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை பார்த்தால், அது எந்த நோய்க்கும் குறைவானது இல்லை என்றே தோன்றுகிறது. உடல் பருமனால் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. உடல் பருமனால் 13 வகையான புற்றுநோய் வரும் அபாயம் இருப்பதாக பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. உடல் பருமனை தவிர்க்க பலர் அறுவை சிகிச்சை கூட செய்து கொள்கிறார்கள் என்பது ஆச்சரியமளிக்கும் உண்மையாகும். 

உடல் பருமனை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். பல மணி நேரங்களை ஜிம்மில் செலவிடும் நபர்களும் உண்டு. பெரும்பாலானோர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். இருப்பினும், பல சமயங்களில் இவற்றாலும் தேவையான பலன்களை பெற முடிவதில்லை. சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் உடல் எடையை குறைக்கலாம். அத்தகைய ஒரு அற்புதமான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். 

உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் நபர்களில் நீங்களும் ஒருவரா? ஆம் என்றால், பிடிவாதமான தொப்பை கொழுப்பை அகற்றுவது எவ்வளவு கடினம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உடல் எடையை குறைப்பதில் நம் அன்றாட உணவுகளே நமக்கு உதவுகின்றன. இந்திய சமையலறைகளில் மஞ்சள் மற்றும் வெந்தயம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இரண்டு மசாலாப் பொருட்களும் நம் உணவில் வித்தியாசமான சுவையை சேர்க்கின்றன. ஆனால் இவை தொப்பையை குறைக்கவும் (Belly Fat) உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உடல் எடையை குறைக்க வெந்தயம் மற்றும் மஞ்சளை எப்படி உட்கொள்ள வேண்டும்? இவை இரண்டும் எப்படி உடல் எடையை குறைக்க உதவுகின்றன? இவற்றை பற்றி இங்கே காணலாம். 

தொப்பை கொழுப்பை குறைக்கும் வெந்தயம் (Fenugreek For Belly Fat Reduction)

வெந்தயத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது தொப்பையை குறைக்க உதவும். வெந்தய விதைகளுடன், அதன் விதைப் பொடியையும் உட்கொள்ளலாம். இதை எப்படி சாப்பிட்டாலும் பலன் தரும். வெந்தயத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது, இது கொழுப்பை எரிக்க உதவுகிறது. இது தவிர, வெந்தயத்தில் கேலக்டோமன்னன் என்ற கலவை உள்ளது. இது பசியைக் குறைக்க உதவும்.

மேலும் படிக்க | வெந்தய நீரின் நம்ப முடியாத நன்மைகள்: தினமும் குடித்தால் திடமாய் வாழலாம்

எடை இழப்புக்கு உதவும் மஞ்சள் (Turmeric For Weight Loss)

நம்மில் பலர் மஞ்சளை நிறம் சேர்க்க மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த அற்புதமான மசாலா எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மஞ்சளில் குர்குமின் என்ற கலவை உள்ளது. இது உடல் பருமன் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பு திசுக்களைத் தடுக்க உதவுகிறது. மேலும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

உடல் எடையை குறைக்க வெந்தயம் - மஞ்சள் தேநீர் செய்து உட்கொள்ளலாம். அதன் செயல்முறையை இங்கே காணலாம். 

வெந்தயம்-மஞ்சள் டீ செய்வது எப்படி? 

- ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.

- இப்போது அதனுடன் வெந்தயப் பொடி அல்லது விதைகளைச் சேர்த்து சிறிது நேரம் தண்ணீரை கொதிக்க விடவும்.

- அதன் பின்னர் அதனுடன் மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பைக் குறைத்து, சிறிது நேரம் கழித்து அடுப்பை அதிகப்படுத்தி, ஒரு கொதி வந்ததும் வடிகட்டி ஒரு கோப்பையில் எடுத்துக்கொள்ளவும். 

- இனிப்பு சேர்க்க, அதனுடன் சிறிது தேன் அல்லது வெல்லம் சேர்த்து, சிறிது சூடு ஆறியதும் அருந்தலாம்.

உடல் எடையை குறைக்கும் வெந்தயம் - மஞ்சள் டீ தயார் ஆகிவிட்டது. தொப்பை கொழுப்பைக் குறைக்க வீட்டிலேயே இந்த பானத்தை தயாரிக்கலாம். இதை உங்கள் தினசரி டயட்டில் சேர்க்கலாம். 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வைட்டமின் பி12 குறைபாடா? இந்த உலர் பழங்கள் மூலம் சரி செய்யலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News