உங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா? ‘இதை’ சாப்பிட வையுங்கள்..

குழந்தைகள் பலர், உயரமாக வளர வேண்டும் என சில பெற்றோர்கள் நினைப்பர். அவர்களுக்கான டிப்ஸ், இதோ.   

Written by - Yuvashree | Last Updated : Apr 20, 2024, 06:14 PM IST
  • குழந்தைகளை உயரமாக வளர வைக்கும் உணவுகள்
  • புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்
  • அவை என்னென்ன உணவுகள் தெரியுமா?
உங்கள் குழந்தைகள் உயரமாக வளர வேண்டுமா? ‘இதை’ சாப்பிட வையுங்கள்.. title=

குழந்தைகள், உயரமாக வளர்வதும் குள்ளமாக இருப்பதும் அவர்களின் மரபணுவில் இருப்பதாக ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இறுப்பினும், இதில் அவர்களின் டயட்டும் பெரிய காரணமாக அமைந்திருக்கிறது. இது குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், குழந்தைகளின் வளர்ச்சி ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தில் அவர்கள் சாப்பிடும் உணவுகளும் பெரிய இடத்தை பெற்றிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. 

தூக்கத்திற்கும் உயரத்திற்கும் கூட தொடர்பு உள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தனது மருத்துவ ஆய்வறிக்கையில் தெரிவித்திருகிறது. நன்றாக தூங்குபவர்கள், நல்ல உயரமாக வளர வாய்ப்பிருப்பதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இத்துடன், குழந்தைகள் உயரமாக வளர்வதற்கு பெற்றோர்கள் கொடுக்க வேண்டிய சில டயட் உணவூகளையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அவை என்னென்ன உணவுகள் தெரியுமா?

பால் சார்ந்த உணவுகள்:

பால் மட்டுமன்றி, பால் சார்ந்த உணவுகளை சாப்பிடுவதும் குழந்தைகள் உயரமாக வளர உதவுமாம். சீஸ், பனீர், தயிர், பால் க்ரீம் உள்ளிட்டவற்றில் வைட்டமின் ஏ,பி,டி மற்றும் ஈ சத்துகள் உள்ளன. அது மட்டுமன்றி, புரதம் மற்றும் கால்சிய சத்துகளும் இதில் இருக்கிறது. உயரம் குறைவாக இருப்பதற்கு, வைட்டமின் டி குறைவாக இருப்பது பெரிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதை நிவர்த்தி செய்ய, பால் உணவுகள் உதவுமாம். 

ஸ்டார்ச் மற்றும் தானிய வகை உணவுகள்:

ஸ்டார்ச் மற்றும் தானிய வகை உணவு பொருட்கள், உடலுக்கு ஆற்றல் அளிக்கக்கூடிய உணவு பொருட்களாக இருக்கின்றன. இவை, உடலுக்கு தேவையான கலோரிகளை வழங்கி, ஹார்மோன் செயல்பாடுகளை ஒழுங்கு படுத்துவதாக கூறப்படுகிறது. ப்ரவுன் அரிசி, பாப்கார்ன், கோதுமை, பாஸ்தா உள்ளிட்ட உணவுகள் உடலுக்கு சரியான கலோரிகளை வழங்குமாம்.

முட்டை:

முட்டையில் புரத சத்து உணவுகள் அதிகளவில் இருக்கின்றன. இதில், வெள்ளை கருவில் மட்டும் 100 சதவிகித புரதம் அடங்கியுள்ளதாம். ஆனால், அதுவே மஞ்சள் கருவில் அதிகமாக கொழுப்பு உள்ளதால் அதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகள்  உயரமாக வளர, அவர்களின் டயட்டில் தினமும் 2 முதல் 4 முட்டைகளை சேர்த்துக்கொள்ள வேண்டுமாம். 

மேலும் படிக்க | எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த தவறுகளை மட்டும் பண்ணவே கூடாது!!

சோயாபீன்:

அனைத்து சைவ உணவுகளை காட்டிலும் சோயாபீன்ஸில் அதிக புரதம் உள்ளதாக கூறப்படுகிறது. சோயாபீன்ஸில் உள்ள சுத்தமான புரதம் எலும்பு மற்றும் திசுக்களை மேம்படுத்த உதவுகிறது. குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க, ஒவ்வொரு நாளும் 50 கிராம் சோயாபீன்ஸ் சாப்பிடுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சைவ உணவு உண்பவர்கள் மிகவும் சத்தான சோயாபீன்களில் இருந்து புரதத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

பச்சை இலை காய்கறிகள்:

கீரை போன்ற பச்சை இலை காய்கறிகளை டயட்டில் சேர்த்துக்கொள்வதால், குழந்தைகள் உயரமாவர் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, ஃபைபர் மற்றும் மாக்னீசியம், இரும்பு சத்துகள் அடங்கியிருக்கின்றன. 

வாழைப்பழம்:

வாழைப்பழம், குழந்தைகளின் உயரத்தை உயர்த்துவதற்கு பெரும் பங்களிக்கும் உணவாக இருக்கிறது. இதில் உடலுக்கு தேவையான பொட்டாசியம், மாக்னீசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் பி6, சி, ஏ உள்ளிட்ட சத்துகள் இருக்கின்றன. இதனால், இதை டயட் உணவை சேர்த்துக்கொள்வதால் குழந்தைகள் நன்றாக வளருவராம். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினமும் தயிர் சாப்பிட்டால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்: முழு பட்டியல் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News