அடாவடி தொப்பை கொழுப்பை அசால்டாய் குறைக்கும் மேஜிக் பானங்கள்: கண்டிப்பா குடிங்க

Weight Loss Tips: இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எடை இழப்பு பானங்கள் தொப்பை கொழுப்பை குறைக்க மிக பயனுள்ளதாக இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 20, 2023, 09:52 AM IST
  • தினமும் காலையில் சோம்பு நீரை அருந்தலாம்.
  • சோம்பு நீரால் உடலுக்கு வைட்டமின் ஏ, சி மற்றும் டி கிடைக்கிறது.
  • இது தவிர, சோம்பு ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் நல்ல மூலமாகும்.
அடாவடி தொப்பை கொழுப்பை அசால்டாய் குறைக்கும் மேஜிக் பானங்கள்: கண்டிப்பா குடிங்க title=

Weight Loss Tips: இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. அதிகரிக்கும் எடையால் உடல் தோற்றம் கெட்டுப்போவதுடன், இது ஆரோக்கியத்திலும் பல கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும். உடல் பருமன் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, தூக்கமின்மை மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். தங்கள் அதிகரித்த எடையைக் குறைக்க, மக்கள் உணவுக் கட்டுப்பாடு முதல் உடற்பயிற்சி வரை அனைத்தையும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் பல சமயங்களில் இவ்வளவு உழைத்தும் எடை குறைவதில்லை. ஆனால் எடையை குறைக்க இவ்வளவு கடினமான முறைகளை பின்பற்ற வேண்டும் என்றில்லை. சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.

மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதாலும், அதிக துரித உணவுகளை உட்கொள்வதாலும், வயிற்றில் கொழுப்பு (Belly Fat) சேரத் தொடங்குகிறது. வயிற்றைச் சுற்றிக் குவியும் இந்த கொழுப்பு பிடிவாதமானது, இது விரைவில் குறைவதற்கான அறிகுறிகளைக் காட்டாது. சில சமயம் பலர் பல வித முயற்சிகளை எடுத்து உடல் எடையை குறைத்து (Weight Loss) விடுகிறார்கள். ஆனால், தொப்பை மட்டும் அப்படியே நின்றுவிடுகிறது. 

பல இயற்கையான எளிய வழிகளில் தொப்பை கொழுப்பை குறைக்க முடியும்.  அப்படி சில எளிய வழிகளை இங்கே காணலாம். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எடை இழப்பு பானங்கள் (Weight Loss Drinks) தொப்பை கொழுப்பை குறைக்க மிக பயனுள்ளதாக இருக்கும். சில சமையலறை மசாலாப் பொருட்களை தினமும் காலையில் ஒரு கிளாஸ் வெந்நீருடன் உட்கொண்டால், தொப்பையைக் குறைக்க உதவும். இந்த மசாலாப் பொருட்களில் (Kitchen Spices) ஏதேனும் ஒன்றை உணவில் சேர்த்துக் கொண்டால், விளைவு தெரியும். இந்த மசாலாப் பொருட்களைப் பற்றியும், அவற்றைக் குடிப்பதால் தொப்பை கொழுப்பை எப்படி குறைக்கலாம் என்பது பற்றியும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | காலை உணவில் முளை கட்டிய தானியங்கள்... வயிற்று பிரச்சனைகளே இருக்காது..!!

சீரக தண்ணீர்

சீரக (Cumin) தண்ணீர் எடையை குறைக்கவல்ல ஒரு நல்ல பானமாகும். இதை சுலபமாக தயாரிக்கலாம். சீரக தண்ணீர் தயாரிக்க, ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சீரகத்தை சேர்க்கவும். இந்த தண்ணீரை 5 நிமிடம் கொதிக்கவைத்து வடிகட்டி ஒரு கிளாஸில் எடுத்துக்கொள்ளவும். இப்படி உங்கள் சீரக நீர் குடிக்க தயாராகிவிடும். இந்த நீர் உடலுக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது, கொழுப்பை எரிக்கிறது, வயிற்றை குறைக்கிறது. 

வெந்தயம் 

கொழுப்பை எரிக்கவும், செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், வெந்தய விதைகளை (Fenugreek) தண்ணீரில் கலந்து குடிக்கலாம். வெந்தயத்தின் தண்ணீரைக் குடிப்பது பசியைக் குறைக்க உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. எடையைக் குறைக்கும் இந்த பானத்தைத் தயாரிக்க, ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, இந்த தண்ணீரை கொதிக்க வைத்து மறுநாள் காலையில் குடிக்கவும். இது தவிர, வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து காலையில் குடிக்கலாம்.

சோம்பு தண்ணீர்

தினமும் காலையில் சோம்பு (Saunf) நீரையும் அருந்தலாம். சோம்பு நீரால் உடலுக்கு வைட்டமின் ஏ, சி மற்றும் டி கிடைக்கிறது. இது தவிர, சோம்பு ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் நல்ல மூலமாகும், இது செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பயனுள்ளதாக இருக்கும். சோம்பு தண்ணீரைக் குடிப்பது எடையைக் குறைக்க உதவுகிறது மற்றும் அதன் விளைவு தொப்பையைக் குறைப்பதில் காணப்படுகிறது. சோம்பு நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரமாகவும் உள்ளது, இதன் நீரை குடிப்பதால் வயிறு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் இருக்கும். வெந்தய நீரை தினமும் காலையில் அருந்தலாம். இரவு சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து கூட இந்த தண்ணீரை குடிக்கலாம்.

மேலும் படிக்க | பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் அட்டகாசமான ஆறு நன்மைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News