நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களை அண்ட விடாமல் தடுக்க எளிமையான வழிகள் இதோ!!

இப்போது மக்கள் தங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க, அனைத்து வழிகளையும் அனைவரும் பின்பற்றப்படுகின்றனர்.

Last Updated : Nov 13, 2020, 05:06 PM IST
  • யோகாசனங்கள் ஒருவரது உடலுக்கு பல நன்மைகளை செய்கின்றன.
  • தினமும் அரை மணி நேர உடற்பயிற்சி செய்வதன் மூலம், நீங்கள் பல நோய்களிலிருந்து விலகி இருக்க முடியும்.
  • நிபுணர்களின் கூற்றுப்படி, காலை சிற்றுண்டி மிக முக்கியமான உணவாகும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களை அண்ட விடாமல் தடுக்க எளிமையான வழிகள் இதோ!! title=

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களுக்கு மத்தியில், ​​மக்களுக்கிடையில் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. முன்பு மக்கள் உடல்நலம் குறித்து இந்த அளவிற்கு விழிப்புடன் இருக்கவில்லை. ஆனால் இப்போது மக்கள் தங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர்.

குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) வலுவாக வைத்திருக்க, அனைத்து வழிகளையும் அனைவரும் பின்பற்றப்படுகின்றனர். நிபுணர்களின் கூற்றுப்படி, நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக உள்ளவர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்றால் பெரிய ஆபத்து இருப்பதில்லை. பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் அதிக ஆபத்தை உண்டுபண்ணுகிறது.

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க, இந்த எளிய 5 வழிகளை நீங்கள் பின்பற்றலாம்.

யோகாசனம்

யோகாசனங்கள் (Yoga) ஒருவரது உடலுக்கு பல நன்மைகளை செய்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நீங்கள், பாலாசன், சேதுபந்தனாசன், தனுராசன், மற்றும் ஷலபாசன் ஆகியவற்றை செய்யலாம். இந்த யோகா ஆசனங்கள் உங்கள் தசைகளை தளர்த்தும். ரத்தம் உடல் முழுவதும் சீராக பரவி இருக்கும்.

ஆயில் புல்லிங் செய்யுங்கள்

நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த ஆயுஷ் அமைச்சகம் Oil Pulling-ஐ பரிந்துரைத்துள்ளது. இது ஒரு ஆயுர்வேத முறையாகும். இதைச் செய்வதன் மூலம், வாயில் பாக்டீரியாக்கள் இல்லாமல் இருக்கும். இது காலையில் வெறும் வயிற்றில் செய்யப்படுகிறது. இதற்காக, தூய தேங்காய் எண்ணெயை / நல்லெண்ணெயை 4-6 நிமிடங்கள் வாயில் வைத்து கொப்பளிக்க வேண்டும்.

ALSO READ: ஒருபுறம் COVID, மறுபுறம் காற்று மாசுபாடு: இரண்டையும் சமாளிக்க எந்த mask அணிய வேண்டும் தெரியுமா…

உடலில் போதிய நீர் இருப்பது அவசியம்

ஆரோக்கியமாக இருக்க, உடலில் தேவையான அளவு நீர் இருப்பது மிகவும் முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதற்கு, தினமும் காலையில் எழுந்த பிறகு, இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். எலுமிச்சை, தேன், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்தும் நீர் உட்கொள்ளலாம்.

உடற்பயிற்சி செய்யுங்கள்

தினமும் அரை மணி நேர உடற்பயிற்சி செய்வதன் மூலம், நீங்கள் பல நோய்களிலிருந்து விலகி இருக்க முடியும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது. இந்த பழக்கத்தை நீங்கள் சாதாரண உடற்பயிற்சிகள், நடைபயிற்சி, ஜாகிங், சைக்கிள் ஓட்டுதல் ஆகியவற்றிலிருந்து தொடங்கலாம்.

காலை சிற்றுண்டி மிக அவசியம்

நிபுணர்களின் கூற்றுப்படி, காலை சிற்றுண்டி (breakfast) மிக முக்கியமான உணவாகும். எனவே காலை உணவை ஒருபோதும் தவிர்க்க வேண்டாம். தினமும் காலையில் எடுத்துக்கொள்ளும் முதல் உணவில், புரதம், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்ஸ், மற்றும் ஃபைபர் ஆகியவை இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

குறிப்பு: மேலே கூறப்பட்ட குறிப்புகள் மற்றும் பரிந்துரைகள் பொதுவான தகவல்களுக்கானவை. எந்தவொரு மருத்துவர் அல்லது மருத்துவ நிபுணரின் ஆலோசனையாகவும் அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம். நோய் அல்லது தொற்றுநோய்களின் அறிகுறி காணப்பட்டால், கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.

ALSO READ: கொய்யா இலைகளால் நன்மைகள் கோடி! பொய்யா வாக்கு இது!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News