Best Natural Remedy For Arthritis/Joint Pain: இன்றைய மோசமான வாழ்க்கை முறையாலும், தவறான உணவுப் பழக்கத்தாலும் மூட்டு வலி, கீல்வாதம் போன்ற பிரச்சனைகளால் முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வலியைக் குறைக்க நம்மில் பலர் பல்வேறு வகை வலி நிவாரண மாத்திரைகள், களிம்புகள் மற்றும் கிரீம்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், அதன் மூலம் கிடைப்பது தற்காலிக நிவாரணம் மட்டுமே. மேலும், அதற்கு பக்க விளைவுகளும் உண்டு. இயற்கையான முறையில் வலியைக் குறைப்பது எப்போதுமே மிகவும் சிறந்தது.
வீட்டு வைத்தியம் மூலம் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். இன்றைய காலகட்டத்தில் மூட்டு வலி ஒரு தீவிர நோயாக மாறியுள்ள நிலையில், மூட்டு வலி பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற, மூலிகை டீ பெரிதும் உதவும். இதன் உதவியுடன் மூட்டு வலி (Joint Pain Remedies) சிக்கலை முழுமையாக தீர்க்க முடியும். வலி நிவாரணியாக செயல்படும் சிறப்பு டீ தாயாரிக்கும் முறையை பற்றி தெரிந்து கொள்வோம்...
மூட்டு வலியை போக்கும் டீயை தயாரிக்க, இஞ்சி, மஞ்சள் மற்றும் கருமிளகு ஆகியவை தேவைப்படும். இவை நாம் சமையிலில் அன்றாடம் பயன்படுத்தும் பொருள் தான். ஆயுர்வேதத்தில், இந்த வீட்டு வைத்தியம் மூட்டு வலியைப் போக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முழங்கால்களை உராய்வில் இருந்து காக்க தேவையான மூட்டுக்களில் எண்ணெய் பசையை வழங்குவதோடு, வீக்கம் மற்றும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும் இந்த அற்புத மூலிகை டீயை தயாரிக்கும் முறையை தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | கலப்பட ஐஸ்கிரீம் விஷம் போன்றது... கண்டறிய FSSAI பரிந்துரைக்கும் எளிய வழி
மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை
மூலிகை தேநீர் தயாரிக்க, துருவிய இஞ்சி ஒரு துண்டு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை கருமிளகு தூள் அகியவை தேவை. பிறகு ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, இஞ்சி, மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். சிறிது நேரம் கொதித்த பிறகு, அதில் ஒரு சிட்டிகை கரு மிளகு பொடி மற்றும் தேன் சேர்த்து பருகவும்
நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் தேன் சேர்ப்பதை தவிர்க்கவும் அல்லது குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ளவும். இந்த மூலிகை டீயின் சுவையும் அனைவருக்கும் பிடிக்கும். இது மூட்டு வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். இதனை நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சாப்பிடலாம்.
மூலிகை தேநீரால் கிடைக்கும் நன்மைகள்
ஆயுர்வேதத்தில், இந்த தேநீர் மூட்டு வலிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தசை மற்றும் மூட்டு வலியைப் போக்குவதில் நன்மை பயக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இஞ்சியில் நிறைந்துள்ளன. மஞ்சளிலும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உடலில் வீக்கத்தை போக்கி வலியை போக்குகிறது. இது தவிர, எண்ணற்ற மருத்துவ பலன்கள் கொண்ட கருப்பு மிளகும் வலியைப் போக்க உதவுகிறது. எனவே, நீங்கள் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற இதை தாராளமாக உட்கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ