வைட்டமின் பி 12 சத்து நிறைந்த உணவுகள்: ஒவ்வொரு ஊட்டச்சத்தும் நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. எந்த ஒரு சத்தின் அளவும் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. வைட்டமின் பி-12 நம் உடலுக்கு முக்கியமானது. உடலில் செல்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் விட்டமின் பி12, இது நமது மூளையின் செயல்பாட்டிற்கு மிக அத்தியாவசிய சத்தாகும். வைட்டமின் பி12 குறைந்தால், மூளை பலவீனமடைவதோடு, எலும்புகளும் பலவீனமடையும். உடலில் பல செயல்பாடுகளுக்கு உதவும் வைட்டமின் பி-12 என்ற சத்தை, உடல் தானாக உருவாக்க முடியாது. எனவே வைட்டமின் பி-12 குறைபாட்டைத் தவிர்க்க, நம் அன்றாட உணவில் சில உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் இந்த ஊட்டச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்ய முடியும், குறைபாடு ஏற்படுவதை தவிர்க்கவும் செய்யலாம்.
உடலில் வைட்டமின் பி 12 சத்தின் பங்கு
1. வைட்டமின் பி12 செல் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. எலும்புகளை வலுவாக்கும். மேலும், இது சருமம, நகங்கள் மற்றும் முடியை பலப்படுத்துகிறது. வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால், எலும்பு சம்பந்தமான நோய்கள் விலகும்.
2. வைட்டமின் பி12 இரத்த சிவப்பணுக்களை (RBCs) உருவாக்க உதவுகிறது. அதன் குறைபாடு காரணமாக, இரத்த சிவப்பணுக்கள் கட்டுப்பாடற்ற அளவில் உருவாகத் தொடங்குகின்றன. இது மெகாலோபிளாஸ்டிக் அனீமியாவுக்கு வழிவகுக்கும்.
மேலும் படிக்க | குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட... சில எளிய வீட்டு வைத்தியங்கள்!
3. வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது, மூளையின் வளர்ச்சிக்கும் அத்தியாவசியமானது . கர்ப்ப காலத்தில், இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைப்பதன் காரணம், குழந்தையின் மூளை வளர்ச்சி சரியாக இருக்க வேண்டும் என்பது தான். இதனால் கருவின் வலர்ச்சி சிறப்பாக இருக்கும்.
4. வைட்டமின் பி12 கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. உடலில் சரியான அளவு இருப்பதால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
5. வைட்டமின் பி12 கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, அதன் பயன்பாடு வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இதனால் உடல் எடைய குறையவும் இந்த ஊட்டசத்து அவசியம்.
6. வைட்டமின் பி12 டிஎன்ஏ ரெப்ளிகேஷனில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் குறைபாடு காரணமாக,மரபணு தொடர்பான பிரச்சனைகள் எழலாம்.
விட்டமின் நிறைந்த உணவுகள்
வைட்டமின் பி-12 இன் குறைபாட்டைப் போக்க, விட்டமின் பி12 நிறைந்த உணவுகளை தவறாமல் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
1. மீன் வைட்டமின் பி12 இன் நல்ல மூலமாகும். இதை சாப்பிடுவதால் ஏராளமாக கிடைக்கும். அதிலும், டுனா மற்றும் சால்மன் மீன் உணவுகள் விட்டமின் பி12 சத்தின் சிறந்த ஆதாரம்.
2. வைட்டமின் பி12 முட்டை, கோழி மற்றும் இறைச்சியிலும் நல்ல அளவில் காணப்படுகிறது.
3. வைட்டமின் பி12 குறைபாட்டை பால் மற்றும் தயிர், பனீர், டோஃபு போன்ற பால் பொருட்களால் தீர்க்க முடியும்.
4. ப்ரோக்கோலி போன்ற சில காய்கறிகளிலும் வைட்டமின் பி12 உள்ளது.
5. வைட்டமின் பி12 சோயாபீன் மற்றும் ஓட்ஸ் போன்ற தானியங்களிலும் காணப்படுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | முட்டையை ‘இப்படி’ சாப்பிட்டால் போதும்... ரத்த நாளங்களில் உள்ள அடைப்பு நீங்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ