Brain Stroke: மூளை பக்கவாதம்... காரணங்களும்.. அதன் ‘ஆபத்தான’ அறிகுறிகளும்!

Symptoms & Causes of Brain Stroke: மூளையில் இருக்கும் இரத்த குழாய்கள் அடைபடும் போதோ அல்லது அவை வெடிக்கும் போதோ, மூளை பக்கவாதம் ஏற்படுகிறது. மூளை பக்கவாதம் () பாதிப்பு காரணமாக நீண்ட கால இயலாமை ஏற்படும். சில சமயங்களில் இறப்புகூட நிகழலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 25, 2024, 03:12 PM IST
Brain Stroke: மூளை பக்கவாதம்... காரணங்களும்.. அதன் ‘ஆபத்தான’ அறிகுறிகளும்! title=

Symptoms & Causes of Brain Stroke: மூளையில் இருக்கும் இரத்த குழாய்கள் அடைபடும் போதோ அல்லது அவை வெடிக்கும் போதோ, மூளை பக்கவாதம் ஏற்படுகிறது. மூளை பக்கவாதம் (Brain Stroke) பாதிப்பு காரணமாக நீண்ட கால இயலாமை ஏற்படும். சில சமயங்களில் இறப்புகூட நிகழலாம். மூளை பக்கவாதம், உலகின் மூன்றாவது பொிய உயிா் கொல்லி நோயாக உள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

நாம் உயிருடன் இருக்கிறோமா அல்லது இல்லையா என்பதை இதயமும் மூளையும் தான் தீர்மானிக்கிறது. இதயம் துடிப்பதை நிறுத்தினால், அந்த நபர்  மரணம் அடைந்து விட்டார் என அறிந்து கொள்ளலாம். அதே போல் மூளை இறந்துவிட்டாலும், அந்த நபர் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறார். ஆரோக்கியமான உடலுக்கு ஆரோக்கியமான மூளை மிக அவசியம். 

மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள்

ஆனால் சில நேரங்களில், மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் என்னும் ஹைபர் டென்ஷன் உள்ளிட்ட பிற காரணங்களால் மூளைக்கு இரத்த விநியோகம் தடைபட்டு மூளையில் பாதிப்பு ஏற்படுகிறது. இது பொதுவாக மூளை பக்கவாதம் என அழைக்கப்படுகிறது. மூளை சீராக இயங்குவதற்கு, ஆக்ஸிஜனும், உட்டச்சத்துகளும் தொடா்ந்து கிடைக்க வேண்டும். எனவே, மூளையின் இரத்தக் குழாய்களில் அடைப்போ அல்லது வெடிப்போ ஏற்பட்டால், இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, அதனால் மூளையில் உள்ள நியூரான்கள் இறந்துவிடும். மூளையின் ஒவ்வொரு பாதியும், அதன் எதிா் பகுதியில் உள்ள உடல் பகுதியைக் கட்டுப்படுத்தும். அதாவது வலது மூளையில் பக்கவாதம் ஏற்பட்டால், இடது பக்க உடலின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்.

மூளை பக்கவாதம் என்றால் என்ன

இரத்த ஓட்டம் சீராக இருந்தால் தான், உடலின் இயக்கம் சீராக இருக்கும். இதயத்தின் வேலை உடலின் மற்ற பகுதிகளுக்கு இரத்தத்தை கொண்டு செல்வது. ஆனால் பல சமயங்களில், மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம்  உள்ளிட்ட சில காரணங்களால் மூளைக்கு ரத்தம் கொண்டு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு ரத்தம் சென்றடைவதில்லை. சில நேரங்களில் இரத்த நாளங்கள் வெடிப்பதால் மூளைக்குள் இரத்தம் கசிவு ஏற்படும். மூளைக்கு ரத்தம் செல்லவில்லை என்றால், மூளையினால் இயங்க முடியாது. இது தான் மூளை பக்கவாதம்.

மூளை பக்கவாதத்தின் அறிகுறிகள்

பார்வைக் கோளாறு

மூளை உடலின் ஒவ்வொரு பகுதியையும் கட்டுப்படுத்துகிறது. எனவே மூளை பாதிக்கப்பட்டால், உடல் முழுவதும் பாதிக்கப்படும். மூளை பக்கவாதம் கண்களின் பார்வை திறனை பாதிக்கிறது. சில நேரங்களில் மிகவும் பிரகாசமாக இருக்கலாம். சில சமயங்களில் மங்கலாகத் தோன்றலாம். மூளையில் இருந்து தகவல்களைச் சுமந்து செல்லும் நரம்பு சேதமடைவதால் இவ்வாறு நிகழ்கிறது. எனவே அலட்சியம் செய்யாமல் உடனே மருத்துவரை அணுகவும்.

மேலும் படிக்க | இறைச்சி, மீன் சாப்பிட்டாலும் எலும்புகள் வலிமை பெறாது! இந்த 2 பொருட்கள் போதும்

முகத்தின் ஒரு பகுதியில் பாதிப்பு

முகத்தின் ஒரு பகுதி இயல்பான நிலைக்கு மாறாக இருக்கும். இது முக அமைப்பையும், முக தோற்றத்தையும் பாதிக்கும். பக்கவாதம் காரணமாக வாய் அல்லது கண்கள் அடிக்கடி ஒரு பக்கமாக இழுத்துக் கொள்வது போல் இருக்கும். இந்த அறிகுறி இருந்தால், அலட்சியம் காட்ட வேண்டாம்.

உடலில் அதீத சோர்வு

உடலில் ஆற்றல் மட்டம் மிகவும் குறைவாக இருக்கும். சில சமயம் உடம்பு முழுவதும் மரத்துப் போனது போன்ற உணர்வு ஏற்படும். உணர்ச்சியற்ற நிலை ஏற்படுவது, மாரடைப்புக்கான பொதுவான அறிகுறிகளிலும் ஒன்றாக உள்ளது. மூளையின் ஒரு பகுதியில் ரத்தக்கசிவு ஏற்படுவதால், மற்றொரு பகுதி மரத்துப் போகிறது.

நெஞ்சு வலி

சில நேரங்களில் நோயாளிக்கு மார்பில் கடுமையான வலி  இருக்கலாம். இது வாயு கோளாறு அல்லது அஜீரணத்தினால் ஏற்படும் வலி என்று அலட்சியபடுத்தாமல் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ளவதால், கடுமையான பிரச்சனைகளை தவிர்க்கலாம். 

பேச்சில் தடுமாற்றம்

மூளையின் செயல்பாடு பாதித்தால், அதன் தாக்கத்தை உடல் முழுவதும் காணலாம். பக்கவாதத்தின் பாதிப்பு நாக்கிலும் இருக்கும். ஏனெனில் இதுவும் மூளையால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால், பேச்சில் தடுமாற்றம் இருந்தாலோ அல்லது பேச முடியாமல் வாய் குளறுகிறது என்றாலோ, அலட்சியம் வேண்டாம். பக்கவாதத்தின் போது நாக்கில் உள்ள தசைகள் செயலிழந்துவிடும். அதனால் நோயாளி எவ்வளவு முயற்சி செய்தாலும் சரியாக பேச முடியாது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | வெயிலில் அலைந்து குளிச்சதும் இதை செய்யவே செய்யாதீங்க... தோல் மருத்துவரின் அட்வைஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News