என்னதான் குளிர்காலத்தில் பலருக்கும் பிடித்தமான காலமாக இருந்தாலும் இந்த பருவத்தில் தான் அதிகளவு நோய்களும் அதிகரிக்கும் என்பதையும் மக்கள் நினைவில் கொள்ள வேண்டும், அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு பல நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. கொரோனா தொற்றின் அலை கொஞ்சம் ஓய்ந்தாலும் இந்த குளிர்காலத்தில் இவற்றின் தாக்கம் சில குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்த காலநிலையாக இருந்தாலும் சரி நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் வரக்கூடிய நோயின் தாக்கத்திலிருந்து நம்மால் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். அதிலும் முக்கியமாக குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை கொடுப்பதன் மூலம் அவர்களை எவ்வித நோயும் அண்டாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம். இந்த குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய 7 வகையான சிறந்த உணவுகளை பற்றி இங்கே காண்போம்.
மேலும் படிக்க | வேகவைத்த ஆப்பிள் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
1) சர்க்கரைவள்ளிக்கிழங்கு :
வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் பிற முக்கிய கூறுகளின் சக்திவாய்ந்த மூலமாக சர்க்கரைவள்ளிக்கிழங்குகள் விளங்குகிறது. இந்த கிழங்கு வகை நல்லதொரு சுவையை தருவது மட்டுமின்றி உங்கள் குழந்தையின் பாதுகாப்பை பலப்படுத்தும்.
2) வெல்லம்:
இந்த ஆரோக்கியமான இனிப்பு சுவை கொண்ட வெல்லத்தில் புரதம், கோலின், பீடைன், வைட்டமின் பி12, பி6, ஃபோலேட், கால்சியம், இரும்பு மற்றும் பல தாதுக்கள் நிரம்பியுள்ளது. இதனை உங்களுக்கு தினசரி உணவில் சேர்த்து கொடுப்பதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.
3) நெல்லிக்காய்:
இளமை தோற்றத்திற்கு வழிவகுக்கும் நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் காய்ச்சல், ஜலதோஷம் மற்றும் செரிமான பிரச்சனைகள் போன்ற பொதுவான நோய்களைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அதனால் இது குழந்தைகளுக்கு ஏற்றது.
4) பேரீச்சம்பழம்:
பேரீச்சம்பழம் சாப்பிடுவதன் மூலம் உடலில் ஹார்மோன் ஒழுங்குமுறை, வீக்கம் குறைப்பு மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு தூண்டுதல் போன்ற செயல்கள் நடக்கிறது. பேரீச்சம்பழத்தில் பைட்டோநியூட்ரியண்ட்கள் உள்ளன, அவை பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
5) சிட்ரஸ் பழங்கள்:
வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை, எலுமிச்சை, திராட்சைப்பழம் மற்றும் க்ளெமெண்டைன்கள் உள்ளிட்ட சிட்ரஸ் பழங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, குழந்தைகளின் எதிர்ப்பு சக்தியை இவை சிறந்தது.
6) பீட்ரூட்:
இயற்கையிலேயே சிறிது இனிப்பு சுவையுடைய பீட்ரூட்களில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இது செரிமான ஆரோக்கியத்திற்கு சிறந்தது. மேலும் இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுகிறது மற்றும் நோய் ஆபத்துக்களும் குறைவாக உள்ளது.
7) டர்னிப்:
சிவப்பு முள்ளங்கி வகையை சார்ந்த டர்னிப் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த உதவுகிறது, இதில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி வெளிப்புற நோய்த்தொற்றுகளுக்கு எதிராக உடலைப் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும்.
மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ