பழங்கள் ஆரோக்கியத்தின் களஞ்சியங்கள் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. நம்மில் பலருக்கு சாப்பிட்ட பிறகு பழங்களை சாப்பிடும் பழக்கம் உள்ளது. அலுவலகமாக இருந்தாலும் சரி, வீட்டாக இருந்தாலும் சரி, உணவுக்குப் பிறகு பழங்கள் சாப்பிடுவது வழக்கம் உள்ளது பெரும்பாலானோருக்கு உள்ளது. ஆனால், உணவு உண்ட உடனே பழங்களை உட்கொள்ளக் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அது மட்டுமின்றி, பழங்களில் உள்ள சத்துக்களின் முழுப் பலனையும் உங்கள் உடலும் பெறாது. எனவே, ஒருவர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பழங்களை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர். குறிப்பாக மாம்பழம் இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். வாழைப்பழம் நீரிழிவு நோயாளிகள் இதை உட்கொள்ளவே கூடாது. இது செரிமான அமைப்பையும் பாதிக்கிறது. சாப்பிட்ட பிறகு சாப்பிடக்கூடாத சில பழங்கள் பற்றியும், அவை உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். பழங்கள் சாப்பிட சரியான நேரம் காலை என்று உணவு நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஆயுர்வேதமும் அதையே சொல்கிறது.
உணவுக்குப் பிறகு பழங்கள் சாப்பிடுவதைப் , ஆயுர்வேதம் சரியான பழக்கமாக கருதுவதில்லை. இது செரிமான அமைப்பையும் பாதிக்கிறது என ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும், சிட்ரஸ் பழங்கள் தவிர மற்ற பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது எனவும் கூறப்படுகிறது. பழங்களை பகல் பொழுதில் வெறும் வயிற்றில் உண்பது தான் மிகவும் சிறந்தது. ஏனெனில், வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடும் போது, சத்துக்கள் முழுவதுமாக நமக்கு கிடைக்கும். பகல் பொழுதில் உணவு உண்ட பிறகு பழங்களை சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால், பழங்களினால் நமக்கு எந்தவித சத்தும் கிடைக்காது.
உணவு உண்ட பிறகு சாப்பிடக் கூடாத சில பழங்களை அறிந்து கொள்ளலாம்:
ஆரஞ்சு
வைட்டமின்-சி நிறைந்த ஆரஞ்சுகளை உணவுக்கு 1 மணி நேரத்திற்கு முன் அல்லது உணவுக்கு 1 மணி நேரத்திற்குப் பிறகு உட்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மாம்பழம்
மாம்பழத்தில் நிறைய சர்க்கரை உள்ளது. இது இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்ட பின் இதை உட்கொள்ளவே கூடாது. மேலும் இது உடலில் சூட்டை ஏற்படுத்தும் என்பதால், சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் அல்லது பின் சாப்பிடலாம் என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் படிக்க | காலை எழுந்தவுடன் முதலில் தண்ணி குடிங்க: நம்ப முடியாத நன்மைகள் நடக்கும்
சாத்துக்குடி
சாத்துக்குடியில், குளுக்கோஸ் உள்ளது, இது ஆற்றலை அளிக்கிறது. உணவுக்கு பின் சாப்பிட்டால், சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும். பிற்பகலில் அதை உட்கொள்வது சிறந்தது. இது நீரிழப்பு பிரச்சனையிலிருந்து விடுவிக்கிறது. வெயிலில் செல்வதற்கு முன்பு சாத்துகுடி எடுத்துக் கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும்.
வாழைப்பழம்
வாழைப்பழம் உடலில் கலோரி மற்றும் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது என்பதால், இதனை தவிர்க்க வேண்டும். மேலும் இரவில் தூங்குவதற்கு முன்னர் வாழைப்பழம் சாப்பிட்டால், செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தி விடும். தூக்கமின்மைப் பிரச்சனையையும் ஏற்படும். ஆகையால், இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
தர்பூசணி
தர்பூசணி சாப்பிட மதியம் சரியான நேரம். இரவு உணவிற்குப் பிறகு அதை உட்கொள்ளக்கூடாது. தர்பூசணி மற்றும் நீர்ச்சத்து நிறைந்திருக்கும் பழங்களை இரவில் தூங்குவதற்கு முன்பு சாப்பிட்டால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.
திராட்சை
திராட்சை உடலில் ஈரப்பதத்தைத் தக்கவைக்கிறது. திராட்சை சாப்பிடும் போது, சாப்பிட்ட ஒரு மணி நேரம் பின்னோ அல்லது முன்னோ எடுத்துக் கொள்ள வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | ஓவரா எடை ஏறினாலும் ஒய்யாரமா குறைக்கலாம்: இந்த சூப்பர் உணவுகள் கை கொடுக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ