பித்தளை பாத்திரத்தை பயன்படுத்துவதால் இத்தனை நன்மைகளா?

 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நமது முன்னோர்கள் பித்தளை பாத்திரம் கிருமிகளை நீக்கும் தன்மை கொண்டது என்பதை கண்டறிந்துள்ளனர். 

Written by - Dayana Rosilin | Last Updated : Apr 25, 2022, 04:52 PM IST
  • கிருமிகளை நீக்கும் பித்தளை பாத்திரம்
  • உணவின் குணத்தை மாற்றாதது
  • பாரம்பரியத்தில் பித்தளையின் பங்கு
பித்தளை பாத்திரத்தை பயன்படுத்துவதால் இத்தனை நன்மைகளா? title=

திருமணம் என்றால் இன்றும் பெண்களுக்கு சீதனமாக கொடுத்து அனுப்புவதில் முதன்மையானது பித்தளை பாத்திரங்கள்தான். முன்னோர்கள் ஏன் இந்த பித்தளை பாத்திரங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதில் அப்படி என்ன உள்ளது என்றால் கேள்விகள் எழுந்தாலும் இன்றைய நவீன வாழ்கை முறையில் நமது முன்னோர்கள் மேற்கொண்டு வந்த பழக்க வழக்கங்கள், பித்தளை பாத்திரத்தின் பயன்பாடுகள் என அனைத்தும் முற்றிலும் மறக்கப்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.

மேலும் படிக்க | துளசியில் இருக்கும் மருத்துவ குணங்கள்

Brass

அதனால், இன்றைய தலைமைமுறை ஏராளமான நோய் நோடிகளுக்கு ஆளாகி வரும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதற்கு என்னதான் தீர்வு என நீங்கள் கேட்கலாம். வேறு வழியே இல்லை நமது முன்னோர்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை பின்பற்றியே ஆக வேண்டும்.கடந்த 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நமது முன்னோர்கள் பித்தளை பாத்திரம் கிருமிகளை நீக்கும் தன்மை கொண்டது என்பதை கண்டு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, ஒலிகோடைனமிக் (Oligodynamic) என்று அதை குறிப்பிடுவார்கள். உலோகங்களின் உயிர் இயக்க விளைவாக உள்ள பித்தளை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைப்பதன் மூலம் அதில் இருக்கக்கூடிய கிருமிகள் 8 மணி நேரத்தில் சுத்திகரிக்கப்படுகிறது. அது மட்டும் இன்றி அந்த தண்ணீரில் பித்தளை பாத்திரத்தில் உள்ள  தாமிரம் கலப்பதன் மூலம் அதை நாம் பருகும்போது உடல் செயல்பாட்டிற்கு ஊக்கம் தருகிறது. மேலும் உடல் சூட்டையும் அந்த தண்ணீர் முற்றிலுமாக குறைக்க உதவுகிறது. 

மேலும் படிக்க | Brain Health: மூளை சோர்வு, மன பாரத்தை நீக்கும் அற்புத மூலிகைகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News