சனி பெயர்ச்சி 2025: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் இவைதான்.... நல்ல காலம் ஆரம்பம்

Sani Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டில், சனி பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணம் ஆகிய இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் நிகழவுள்ளன. இதனால் யாருக்கு அதிக லாபம்? எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்? 

Sani Peyarchi Palangal: மார்ச் மாதம் சனி பெயர்ச்சி நடக்கவுள்ளது. சனி பகவான் மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இந்த வருடம், சனிப் பெயர்ச்சியும் சூரிய கிரகணமும் ஒரே நாளில் நிகழ்கின்றன. மார்ச் மாதம் சூரிய கிரகணத்தன்று நடக்கவுள்ள சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /11

அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கத்தால் சில ராசிகளுக்கு நல்ல பலன்களும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

2 /11

ஜோதிடத்தில் சனி மிக முக்கியமான ஒரு கிரகமாக உள்ளார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிக்கிறார். சனியின் இயக்கத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.

3 /11

சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ளார். அவர் மார்ச் மாதம் 29 ஆம் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். அன்று சூரிய கிரகணமும் நிகழவுள்ளது. ஒரே நாளில் சூரிய கிரகணம் மற்றும் சனி பெயர்ச்சி நடப்பது மிக முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

4 /11

மார்ச் மாதம் சூரிய கிரகணத்தன்று நடக்கவுள்ள சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். இவர்களது தொழில், நிதி, ஆரோக்கியம் மற்றும் தொழில் வாழ்க்கை அமோகமாக அமையும். சனி பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணத்தின் பலன்களால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

5 /11

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி பல வித நன்மைகளை அளிக்கும். மிகப்பெரிய நிதி ஆதாயங்களுடன், வணிகத்தில் வளர்ச்சிக்கான வழிகள் திறக்கும். அதிர்ஷ்டத்திடத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு திடீரென்று பணம் சம்பாதிக்க ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்கக்கூடும். அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.

6 /11

விருச்சிகம்: சனி பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபகரமான பலன்களை அளிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான பொழுதை அனுபவிப்பீர்கள். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

7 /11

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணம் மிகவும் அதிர்ஷ்டகரமானதாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடந்துமுடியும். வணிகர்கள் பெரிய அளவில் லாபம் ஈட்டுவார்கள். வியாபாரத்தில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது நன்மை பயக்கும். தனுசு ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவுடன் நல்ல நேரத்தை அனுபவிப்பார்கள். உறவில் ஸ்திரத்தன்மை இருக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

8 /11

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணம் மிகவும் மங்களகரமானதாக இருக்கப் போகிறது. இந்த ராசிக்காரர்கள் ஏழரை சனியிலிருந்து விடுபட போகிறார்கள். சமூகத்தில் மரியாதை கிடைக்கும். நிதி சிக்கல்கள் நீங்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கக்கூடும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.

9 /11

ஏழரை சனி: சனிக்கிரக தோஷம் மற்றும் ஏழரை சனியால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பரிகாரம் செய்ய திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று அவரை வழிபடலாம். இங்கே அருள் புரியும் சனி பகவானை வழிபடுபவர்களுக்கு சனி தோஷம் நிவர்த்தியாகி, சனி அருளால் நன்மைகள் ஏற்பட்டு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

10 /11

சனி பகவானின் அருள் பெற, “ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ” என்ற சனி மூல மந்திரத்தை ஜபிப்பதும் நல்ல பலன்களை அளிக்கும். மேலும், 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்தோத்திரத்தையும் தினமும் கூறலாம்.

11 /11

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.