How To Know If Someone Is A Good Or A Bad Person : நம்முடன் பழகுபவர்கள் எப்போதும் நமக்கு நல்லது நினைப்பது போலதான் தோன்றும். ஆனால் ஏதோ ஒரு எண்ணம் மனதிற்குள் தோன்றுகொண்டே இருக்கும். “இவர்கள் உண்மையாக நல்லவர்தானா? அல்லது நடிக்கிறாரா?” இன்று எண்ணம்தான் அது. தன்னைப் பற்றி மட்டுமே யோசித்து தன் நலனை மட்டுமே அக்கறை செலுத்துபவர்கள் பலர் நம்மை சுற்றி இருப்பர். அவர்களின் எளிதில் கண்டுபிடித்து விடலாம். இதற்கு ஒரு ஐந்து நிமிட டெஸ்ட் வைத்தாலே போதும்.
ஐந்து நிமிட டெஸ்ட்:
ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதை ஐந்து நிமிடத்தில் கண்டுபிடிப்பது கஷ்டம்தான். ஆனால் நாம் இருக்கும் சூழலை வைத்து அவர்களுடன் தொடர்ந்து பழகலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம். அவர்களிடம் ஐந்து நிமிடத்தில் கணிக்க கூடிய சில விஷயங்களை இங்கு பார்ப்போம்.
பிறரை எப்படி நடத்துகின்றனர்:
ஒருவர் தனக்கு கீழ் வேலை செய்பவர்களை எப்படி நடத்துகிறார் அல்லது தனக்கு மேல் வேலை செய்பவரை எப்படி நடத்துகிறார் என்பதை வைத்து அவர் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளலாம். எனவே ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால் அவர் ஒரு ஹோட்டல் வெயிட்டரையோ, வாட்ச் மேனையோ, சுத்தம் செய்பவரையோ எப்படி நடத்துகிறார் என்பதை உற்று நோக்க வேண்டும். அவர்களுக்கு அவர் மரியாதை கொடுக்காமல் நடத்துகிறார் என்றால் அவர் நல்லவராக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. நல்ல மனம் கொண்டவர்கள், யாரையும் தராதாரம் அனைவரையும் ஒரே மாதிரியான மரியாதையுடன் நடத்துவர்.
கேட்கும் திறன்:
நீங்கள் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அல்லது வேறு ஒருவர் அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போதோ அவர் இடைவெளிக்காமல் அந்த விஷயத்தை கேட்கிறாரா என்பதை பார்க்க வேண்டும். அங்கு நடந்து கொண்டிருக்கும் உரையாடல் அவரைப் பற்றி இல்லை என்றால் அவர் கவலை கொள்கிறார் அல்லது அந்த உரையாடல் தன்னைப் பற்றி இருக்க வேண்டும் என தலைப்புகளை மாற்றுகிறாரா என்பதை பார்க்க வேண்டும். நல்ல மனம் கொண்டவர்கள் பிறர் கூறுவதை காது கொடுத்து கேட்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
புரிந்துணர்வு:
ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதை தெரிந்து கொள்ள உங்களைப் பற்றிய ஏதேனும் ஒரு உணர்ச்சிபூர்வமான விஷயத்தை முதலில் பகிருங்கள். அவர்கள் அந்த விஷயத்தை புரிந்து கொண்டு உங்களுக்கு பதில் அளிக்கின்றனரா, அல்லது அப்படியே அதனை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனரா என்பதை பார்க்க வேண்டும். நல்ல மனம் கொண்டவர்கள், பிறரின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
பேச்சு..நடவடிக்கை:
சிலர், பேசும் அல்லது நடந்துக்கொள்ளும் விஷயங்களை வைத்தே அவர் நல்லவரா கெட்டவரா என்பதை கணித்து விட முடியும். யாசகம் கேட்பவர்களுக்கு காசு கொடுக்கிறார்களா, உதவி தேவை படுபவர்களுக்கு உதவி செய்கிறார்களா என்பது போன்ற விஷயங்களை பார்க்க வேண்டும்.
உள் மனசு:
வெளியில் நடந்துகொள்ளும் விஷயங்களை வைத்து, ஒருவரை எடை போட முடியவில்லை என்றாலும், உங்கள் உள் மனம் என்ன கூறுகிறது என்பதை கேளுங்கள். சில சமயங்களில் ஒருவர் மிகவும் நல்லவராக தோன்றினாலும், அவரிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என நம் மனம் சொல்லிக்கொண்டே இருக்கும். அப்போது, அவரிடம் இருந்து விலகியிருப்பதே நல்லது.
மேலும் படிக்க | உங்களின் ரகசிய எதிரிகளை கண்டுபிடிப்பது எப்படி? ‘இந்த’ மாதிரி நடந்து கொள்வார்கள்!
மேலும் படிக்க |பொய் பேசுகிறார்கள் என்பதை எப்படி ஈஸியாக கண்டுபிடிப்பது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ