Health Tips For Winter Season In Tamil: குளிர்காலம் தொடங்கிவிட்டது. மழையும், பனியும் சேர்ந்து உங்கள் உடலுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் காலகட்டமும் வந்துவிட்டது எனலாம். ஆனால், நீங்கள் உணவு பழக்கவழக்கத்திலும், உங்களின் வாழ்க்கைமுறையிலும் தக்க மாற்றங்களை செய்து, சில விஷயங்களை உறுதியுடன் கடைபிடித்தால் நிச்சயம் இந்த குளிர்காலம் உங்களுக்கு இஷ்டமான ஒன்றாக மாறிவிடும்.
நிச்சயம் இந்த குளிர்காலத்தில் பலருக்கும் சளி, ஜலதோஷம் பிடிக்கும். மூக்கடைப்பு, மூச்சுப் பிரச்னை போன்ற உடல்நலப் பிரச்னைகளும் ஏற்படலாம். இதில் இருந்து நிவாரணம் பெற உங்களது உணவு பழக்கவழக்கத்தில் நிச்சயம் அதிக சிரத்தை செலுத்தியாக வேண்டும். இந்த காலகட்டத்தில் நல்ல சூடான உணவுகளையும், பானங்களையும் எடுத்துக்கொள்ள தோன்றும். பசியை தணிப்பதற்கு மட்டும் உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் உடல்நலத்தை பேணவும் நல்ல உணவுகளை தேர்வு செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
குளிர்காலத்தில் இதமளிக்கும் பூண்டு
அந்த வகையில், இந்த குளிர்காலத்தில் பூண்டு சேர்க்கப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். சுவைக்கு மட்டுமின்றி மருத்துவ குணங்களுக்காகவும் அதனை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த பூண்டு இன்றியமையாதது ஆகும். பூண்டில் ஊட்டச்சத்துகளும் நிறைந்திருக்கின்றன. அதில் வைட்டமிண் பி6 அதிகம் இருக்கிறது. இது நரம்பு மண்டலத்திற்கு நன்மை பயக்கும். அதேபோல், ஆற்றலுடனும் செயல்பட வைக்கும். மேலும் இதில் இருக்கும் வைட்டமிண் சி நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்.
மேலும் படிக்க | வேகமான அதிகரிக்கும் உடல் பருமனை விரைவாய் குறைக்கும் பானங்கள்
எனவே, சூப், பொரியல், குழம்பு போன்ற உங்களின் அன்றாட உணவுகளில் அதிகம் பூண்டை சேர்த்துக்கொள்ளுங்கள். இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மையை ஏற்படுத்தும். மேலும், பூண்டை சேர்த்துக்கொள்வதன் மூலம் குளிர்காலத்தில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.
சுவாச பிரச்னைகளுக்கு நிவாரணம்
உடலுக்கு சூட்டை அளிக்கும் பூண்டு, குறிப்பாக குளிர் அதிகமாக இருக்கும் இந்த மாதங்களில் பெரிதும் உதவும். உங்களுக்கு மூக்கடைப்பு ஏற்பட்டு சுவாசிப்பதில் சிக்கல் இருந்தால், அதனை சீராக்கி நீங்கள் இயல்பாக மூச்சுவிட வழிவகுக்கும். மேலும் உங்களின் சுவாச அமைப்பிற்கு இதமளித்து, பெரும் நிவாரணமாகவும் அமையும்.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்
குறிப்பாக, பூண்டில் Allicin என்ற மூலக்கூறு அதிகம் உள்ளது. இது வைரஸ்கள், பூஞ்சைகள், பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படும் குணம் கொண்டதாகும். மேலும், இந்த மூலக்கூறு தொற்றுக்களுக்கு எதிராக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தொற்றுக்கு எதிராக சண்டையிட உதவும். இது உங்கள் உடல்நலன் குன்றாமல் பார்த்துக்கொள்ளும்.
இதயத்திற்கு நல்லது
பூண்டை அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம் உங்கள் உடலின் கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தமானது குறைவாக அதாவது சீராக இருக்கும் எனலாம். இது இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. மேலும், இதன் இயற்கையான மூலப்பொருள்கள் ரத்த நாளத்தை விரிவுபடுத்தி ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் இதய தமனிகள் தடிக்காமல் இருக்கும்.
மேலும் படிக்க | உங்கள் பிறப்புறுப்பை சோப்பு கொண்டு சுத்தம் செய்தால் இவ்வளவு பாதிப்பா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ