தீபாவளிக்கு விவசாயிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் ஜாக்பாட் பரிசு கொடுக்கும் அரசு!

Namo Shetkari Mahasanman: நமோ ஷேத்காரி மகாசன்மான் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் பலனடையும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா பயனாளிகள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 27, 2023, 03:28 PM IST
  • விவசாயிகளுக்கு உதவித்தொகை
  • மகாராஷ்டிர மாநில விவசாயிகளுக்கு உதவித்தொகை
  • பிஎம் கிசான் உதவித்தொகை திட்டம்
தீபாவளிக்கு விவசாயிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் ஜாக்பாட் பரிசு கொடுக்கும் அரசு!   title=

விவசாயிகளுக்கு தீபாவளிக்கு முன்னதாக மகிழ்ச்சியான செய்தி வதிருக்கிறது.  மகாராஷ்டிராவின் விவசாய குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.6000, அதாவது உள்ளூர் சிறு விவசாயிகளுக்கு நிதி ரூ.12,000 கிடைக்கும். இந்த திட்டம் மகாராஷ்டிராவில் உள்ள பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் 86 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு  கிடைக்கும். ஆண்டுக்கு 6000 ரூபாய் கூடுதலாக கிடைப்பதால் விவசாயிகள் பலனடைவார்கள்.   

இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு இரட்டிப்பு பலன்களைத் தருகிரது. அதாவது, முன்பு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (PM-Kisan) கீழ் விவசாயிகள் ரூ.6 ஆயிரம் பெற்று வந்தனர். தற்போது இந்த நிதியுதவி இரட்டிப்பாகியுள்ளது. நமோ ஷேத்காரி மகா சம்மன் நிதி யோஜனா என்ற திட்டத்தை பிரதமர் மோடி நேற்று மகாராஷ்டிர மாநிலத்திற்கு சென்றபோது அறிவித்தார். இதன் மூலம் மகாராஷ்டிராவின் சிறு விவசாயிகள் பயனடைவார்கள்.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியின் போது பேசிய பிரதமர் ‘நமோ ஷேத்காரி மஹாசம்மன் நிதி யோஜனா’ திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம், மகாராஷ்டிராவில் உள்ள பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் 86 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகள் ஆண்டுக்கு ரூ.6,000 கூடுதல் தொகையை வழங்குவதன் மூலம் பயனடைவார்கள். முன்பு விவசாயிகளுக்கு ரூ.6000 மட்டுமே கிடைத்து வந்த நிலையில், தற்போது மகாராஷ்டிர விவசாயிகளுக்கு அது இரட்டிப்பாகும்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரியில் அடுத்த அதிரடி அறிவிப்பு: 50% அகவிலைப்படி, ஊதிய ஏற்றம்

மகாராஷ்டிரா அரசு ‘நமோ ஷேத்காரி மஹா சம்மன் நிதி யோஜனா’(Namo Shetkari Mahasanman Nidhi Yojana) திட்டத்தைத் தொடங்கியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார், இந்தத் திட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவின் ஷேத்காரி குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.6000, அதாவது உள்ளூர் சிறு விவசாயிகளுக்கு சம்மன் நிதியாக ரூ.12,000 வழங்கப்படும். இந்த திட்டம் மகாராஷ்டிராவில் உள்ள பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் 86 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் கூடுதலாக வழங்குவதன் மூலம் பயனடையும்.

‘நமோ ஷேத்காரி மஹா சம்மன் நிதி’க்கு எப்படி விண்ணப்பிப்பது?

மகாராஷ்டிராவில் வசிப்பவர்கள் மட்டும் தான் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். மகாராஷ்டிர மாநிலத்தில் வசிப்பதற்கான இருப்பிடச் சான்று இருக்க வேண்டும்.  அதுபோல, மாநிலத்தில் வாக்கு செலுத்தும் உரிமையும், ஆதார் அட்டை விலாசம் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்ததாக இருக்கவேண்டும். 

மேலும் படிக்க | மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு! போனில் பேசி தீர்வு காணும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

விண்ணப்பிக்கும் விவசாயிகள், விண்ணப்பத்துடன் வாக்காளர் அடையாள அட்டையின் நகலையும் இணைக்க வேண்டும். பிஎம் கிசான் திட்டத்தில் பயன்படுத்தும் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும், மேலும் PM-கிசான் பதிவு எண்ணையும் குறிப்பிட வேண்டும். இது தவிர விவசாய நிலம் தொடர்பான ஆவணங்களை சமர்பிப்பதுடன் வங்கி கணக்கு விவரங்களையும் அளிக்க வேண்டும். 

நமோ ஷேத்காரி மஹா சம்மன் நிதி திட்டத்திற்காக தனி போர்டல் எதுவும் உருவாக்கப்படவில்லை. இருப்பினும், இத்திட்டம் பற்றிய தகவல்களை மகாராஷ்டிரா அரசின் வேளாண்மைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெறலாம். பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறும் விவசாயிகள் நமோ ஷேத்காரி மகா சம்மன் நிதி திட்டத்திற்கு தகுதியுடையவர்கள். இருப்பினும், அவர்கள் இந்தத் திட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | தமிழகத்திற்கு MGNREGA நிலுவைத்தொகையை உடனடியாக விடுவிக்க முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News