PM kisan Man dhan Yojna: விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பல திட்டங்களை மோடி அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டங்களில் மிக முக்கியமானது PM கிசான் சம்மன் நிதி திட்டம். இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் அனுப்பப்படுகிறது. இந்த பணம் ஒரு வருடத்தில் மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு பல விவசாயிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர் இப்போது இந்த விவசாயிகள் ஆண்டுக்கு, ரூ.6000 என்பதற்கு பதிலாக ஆண்டுக்கு ரூ.36000 பெறலாம்.
நீங்கள் பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் பயனாளியாக இருந்தால், ஆண்டுக்கு ரூ.36,000 அதாவது ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாயை பெற என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பிரதம மந்திரி கிசான் மந்தன் யோஜனா (PM Kisan Man Dhan Yojna) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஓய்வூதியத்தை மோடி அரசு ஏற்பாடு செய்தது. இத்திட்டத்தில், 60 வயது மற்றும் அதற்கு மேலான வயதுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். எந்தவொரு விவசாயியும் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு தனி ஆவணங்கள் எதுவும் தேவையில்லை.
ALSO READ | Life Certificate: ஓய்வூதியத்திற்கான உயிர்ச் சான்றிதழை தபால் அலுவலகம் மூலம் பெறலாம்
‘இந்த’ விவசாயிகள் பலன் பெறுவார்கள்
1. 18 முதல் 40 வயதுடைய விவசாயிகள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
2. விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேர் பயிரிடக்கூடிய நிலம் இருக்க வேண்டும்.
3. இத்திட்டத்தில் வயதுக்கு ஏற்ப சிறிதளவு பணம் டெபாஸிட் செய்ய வேண்டும்
டெபாசிட் செய்ய வேண்டிய பணம்
18 வயதுடைய விவசாயிகள்: மாதம் ரூ. 55
30 வயதுடைய விவசாயிகள்: மாதத்திற்கு 110 ரூபாய்
55 வயதுடைய விவசாயிகள்: மாதம் ரூ. 200
மேலும், பிரதமர் கிசான் சம்மன் நிதியைப் பயன்படுத்திக் கொள்ளும் விவசாயிகள் கிசான் மந்தன் யோஜனாவில் அதே பணத்திலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளும் படி கூறலாம். இதற்காக தனியாக பணம் டெபாசிட் செய்ய தேவையில்லை.
ALSO READ | ரயில் பயணிகளுக்கு டிக்கெட் உடன் கிடைக்கும் முக்கிய வசதிகள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR