COVID-19 தொற்று பாதிப்புகள் திடீரென அதிகரித்து வருவதை அடுத்து, சிவில் விமான அதிகாரிகள் சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளனர். சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) சனிக்கிழமையன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. COVID நடத்தை விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
கொரோனா பரவலை தடுப்பது தொடர்பான விதிமுறைகளை, வழிகாட்டுதல்களைப் பயணிகள் பின்பற்றாமல், கவனக்குறைவாக நடந்து கொள்கின்றனர் என்பதை கவனத்தில் கொண்ட அதிகாரிகள் அதற்கேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
"விமானப் பயணத்தை மேற்கொள்ளும் சில பயணிகள்" கோவிட் -19 (COVID-19) நெறிமுறைகளை "கடைபிடிப்பதில்லை என்பது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது, முக்கியமாக மாஸ்கை சரியாக அணிந்துகொள்வதில்லை அதாவது மூக்குக்குக் கீழே அணிகின்றனர். சிலர் விமான நிலையத்திற்குள் நுழைந்த பிறகு கூட மாஸ்க அணிவதில்லை, விமான நிலைய வளாகத்தில் இருக்கும்போது சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
புதிய வழிகாட்டுதல்களின்படி, விதிவிலக்கான சூழ்நிலைகளில் தவிர, மூக்குக்குக் கீழே ஒப்புக்கு மாஸ்குகளை அணியும் பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பலமுறை எச்சரிக்கைகள் விடுத்த போதிலும் கொரோனா வைரஸ் நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால், அந்த பயணி, விமானம் புறப்படுவதற்கு முன்னர் விமானத்திலிருந்து வெளியேற்றப்படுவார் எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விமான நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் பணியாளர்கள் பயணிகள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை உறுதி செய்வார்கள், மாஸ்க் அணியாமல் யாரும் விமான நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்தியாவில் சனிக்கிழமையன்று புதிய COVID-19 தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை,24,882 என்ற அளவில் பதிவாகியுள்ளது, இது வெள்ளிக்கிழமை எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் எட்டு சதவீதம் அதிகம். மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக 140 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 1,13,33,728 ஆக அதிகரித்துள்ளது.
ALSO READ | கொரோனா ஹாட் ஸ்பாட் ஆகும் மகாராஷ்டிரா; சுமார் 16,000 புதிய தொற்று பாதிப்புகள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR