ஓய்வூதியம் தொடர்பான புகார்கள் அனைத்தையும் பதிவு செய்யலாம்.. 24x7 இயங்கும் CPENGRAMS அமைப்பு

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறையுடன் இணைந்து NIC, ஓய்வூதிய குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு  அமைப்பான (Centralized Pension Grievance Redressal and Monitoring System - CPENGRAMS) என்னும்  ஆன்லைன் தளத்தை உருவாக்கியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 10, 2025, 08:45 PM IST
  • ஓய்வூதியம் தொடர்பான புகார்களை விரைவில் தீர்த்து வைப்பதே CPENGRAMS அமைப்பின் நோக்கம்.
  • CPENGRAMS அமைப்பில் யார் எல்லாம் புகார் அளிக்கலாம்?
  • புகார் அளிக்க தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்கள்.
ஓய்வூதியம் தொடர்பான புகார்கள் அனைத்தையும் பதிவு செய்யலாம்.. 24x7  இயங்கும் CPENGRAMS அமைப்பு title=

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறையுடன் இணைந்து NIC, ஓய்வூதிய குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு  அமைப்பான (Centralized Pension Grievance Redressal and Monitoring System - CPENGRAMS) என்னும்  ஆன்லைன் தளத்தை உருவாக்கியுள்ளது. இதில் ஓய்வூதியம் தொடர்பான புகார்கள் எதுவாக இருந்தாலும், அதனை பதிவு செய்யலாம். இந்த தளம் 24x7 பயன்படுத்தக் கூடியது. ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் தொடர்பான புகார்களை விரைவில் தீர்த்து அவற்றைக் கண்காணிப்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.

CPENGRAMS அமைப்பில் யார் எல்லாம் புகார் அளிக்கலாம்?

ஓய்வூதியம் பெறுபவர் அல்லது ஓய்வூதியதாரர் சார்பாக வேறு யாரேனும் ஒருவர் புகார் அளிக்கலாம். ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் நலத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதியர் சங்கமும் ஓய்வூதியதாரர்களின் புகார்களை பதிவு செய்யலாம்.ஓய்வூதியதாரர்களின் (Pensioners) குறைகளை 21 நாட்களுக்குள் நிவர்த்தி செய்ய, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் முயற்சி செய்ய வேண்டும் என சமீபத்தில் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புகார் அளிக்க தேவையான விவரங்கள்

புகாரைப் பதிவு செய்ய, ஓய்வூதியதாரரின் விவரங்கள் மற்றும் அவரது புகார் விவரங்கள் (குறை விளக்கம்) அவசியம். புகாரின் விவரங்களுடன், புகாரை ஆதரிக்க தொடர்புடைய ஆவணங்களையும் பதிவேற்றலாம். ஆனால் ஆவணங்கள் PDF வடிவத்தில் மட்டுமே பதிவேற்றப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். பதிவு படிவத்தில் உள்ள சில நெடுவரிசைகள் கட்டாயம் நிரப்பப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

புகாரை பதிவு செய்யும் முறை

உங்கள் புகாரை பதிவு செய்ய, கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளை பின்பற்றவும்.

1. முதலில் CPENGRAMS இணையதளத்தின் முகப்புப் பக்கத்திற்குச் செல்லவும், இப்போது புதிய புகாரைப் பதிவு செய்ய, "Lodge New Grievance" பொத்தானைக் கிளிக் செய்யவும்.

2. ஓய்வூதியம் பெறுபவரின் வகையைத் தேர்ந்தெடுத்து, Continue என்பதைக் கிளிக் செய்யவும்.

3. புகார் பதிவு படிவத்தில் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, "Submit" பொத்தானைக் கிளிக் செய்யவும்.

4. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிட்ட பிறகு, சரிபார்த்து, பின்னர் Submit என்பதைக் கிளிக் செய்யவும்.

குறிப்பு: மொபைல் எண் சரிபார்க்கப்பட்ட பிறகு, ஒரு பதிவு எண் வழங்கப்படும். பதிவு செய்யும் போது மொபைல் எண்/மின்னஞ்சல் ஐடி வழங்கப்பட்டிருந்தால், இந்த பதிவு எண்ணை ஓய்வூதியதாரருக்கு மின்னஞ்சல்/எஸ்எம்எஸ் மூலமாகவும் அனுப்பலாம்.

புகாரின் நிலையை  சரிபார்க்கும் முறை

1. முகப்புப் பக்கத்தில், "View Grievance/Appeal Status" பொத்தானைக் கிளிக் செய்யவும்.

2. இப்போது உங்கள் பதிவு எண், மொபைல் எண், பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிட்டு, புகார்/மேல்முறையீட்டு நிலைப் பக்கத்திற்குச் செல்ல Submit பொத்தானைக் கிளிக் செய்யவும்.

3. விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு, புகாரின் தற்போதைய நிலை உங்கள் முன் திரையில் தோன்றும். முறையீடு சரியாக பதிவு செய்யப்பட்டிருந்தால், மேல்முறையீட்டின் நிலையும் காட்டப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

மேலும் படிக்க | ஜாக்பாட்... ரூ.56 லட்சம் ரூபாயை பெற்றுத் தந்த பழைய 100 ரூபாய் நோட்டு

மேலும் படிக்க | Budget 2025: எளிய கடன்கள், வரி சலுகைகளை, சிறப்பு ஓய்வூதியம்... பெண்களுக்கு காத்திருக்கும் மாஸ் அறிவிப்புகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News