7th Pay Commission, DA Hike: மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் பூரித்தியாகின. மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை டிஏ எனப்படும் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. எனவே தற்போது அகவிலைப்படி 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்கிறது... கடந்த சில மாதங்களாக தொடர்ந்த நல்ல செய்திகளுக்கு முத்தாய்ப்பாக அகவிலைப்படி அதிகரிப்பு குறித்த அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டது.
அகவிலைப்படியில் நான்கு சதவீத அதிகரிப்பு இருக்கும் என்று எதிர்பார்ப்பு நிறைவேறியது. இந்த அறிவிப்பால் ஊழியர்களுக்கு என்ன நிவாரணம் கிடைக்கும்? இவற்றைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
ஏழாவது ஊதியக்குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின் கீழ் அகவிலைப்படி 50% என்ற அளவை எட்டியதும், வீட்டு வாடகை கொடுப்பவு (House Rent Allowance), கல்விக்கான கொடுப்பனவு (Education Allowance), பயணக் கொடுப்பனவு (Travel Allowance) போன்ற கொடுப்பனவுகளிலும் அதிகரிக்கும் என்பதால், மத்திய அரசின் நேற்றைய முடிவு, மத்திய அரசு பணியாளர்களின் மொத்த சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும்.
50% சதவிகிதமானது அகவிலைப்படி/ அகவிலை நிவாரணம்
இதுவரை 46% அகவிலைப்படியை பெற்று வந்த மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) ஊதியத்தில் நான்கு சதவீத அதிகரிப்பு ஏற்பட்டதால், ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் (Pensioners) அகவிலை நிவாரணமும் (Dearness Relief) 50 சதவீதமாக அதிகரித்தது.
அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு, அடிப்படை ஊதியத்தில் 50 சதவீத அகவிலைப்படி இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும், மேலும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத்தொகை இருந்தால் அவையும் வழங்கப்படும்.மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சநதித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.
#Cabinet approves hike in Dearness Allowance to Government employees and Dearness Relief to pensioners by 4% from January 1, 2024
Around 50 lakh employees and 68 lakh pensioners to benefit from this: Union Minister @PiyushGoyal#CabinetDecisions pic.twitter.com/N7Ao405X2v
— PIB India (@PIB_India) March 7, 2024
“மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் (டிஆர்) ஜனவரி 1, 2024 முதல் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விலைவாசி உயர்வை ஈடுகட்ட, அடிப்படை ஊதியம்/ஓய்வூதியம் 4% உயர்த்த அமைச்சரவை ஒப்புக்கொண்டது."
அகவிலைப்படி உயர்வு தவிர, போக்குவரத்து அலவன்ஸ், கேன்டீன் அலவன்ஸ், டெபுடேஷன் அலவன்ஸ் ஆகியவற்றிலும் 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு வாடகை கொடுப்பனவு அல்லது HRA 27 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகவும், 19 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகவும், அடிப்படை ஊதியத்தில் 9 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சுகன்யா சம்ரிதி யோஜனா.. அதிக வட்டி பெறுவது எப்படி, உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
பணிக்கொடை பலன்களும் தற்போதுள்ள ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சம் உச்சவரம்புடன் 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வின் மூலம், சுமார் 49.18 லட்சம் ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.12,869 கோடி ரூபாய் செலவாகும். தாக்கம் 2024-25 ஆம் ஆண்டில் (ஜனவரி 2024 முதல் பிப்ரவரி 2025 வரை) ரூ.15,014 கோடியாக இருக்கும்.
கணக்கீடு
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படுகின்றது. தொழிலாளர் அமைச்சகத்தின் தொழிலாளர் பணியகம் இந்த CPI-IW தரவுகளை வெளியிடுகிறது.
2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இது அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி மார்ச் மாதம் ஏழாம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | கிரெடிட் கார்ட் விதிகளில் முக்கிய மாற்றம்: சுற்றறிக்கை வெளியிட்ட RBI
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ