7வது ஊதியக்கமிஷன் செய்திகள்: 7வது ஊதியக் குழுவின் கீழ் பயணப்படியான எல்டிசி விதிகள் இந்திய அரசால் மாற்றப்பட்டுள்ளன. அதைப் பாற்றிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
ஊழியர்களுக்கு, எல்டிசி அவர்களின் சம்பளத்தின் மிக முக்கியமான பகுதியாகும். இது அவர்கள் விமானம் அல்லது ரயில் அல்லது சாலை மார்கமாக செய்யும் பயணங்களுக்கான குறிப்பிட்ட பயணப்படியை அரசிடமிருந்து பெற்றுத் தருகிறது. அரசாங்கம் இந்த செலவினங்களை ஊழியர்களுக்கு திருப்பிச் செலுத்துகிறது. இருப்பினும், புதிய விதிகள் ஒரு சில ஊழியர்களுக்கு கவலை அளிக்கும் விஷயமாக இருக்கலாம்.
7வது ஊதியக்கமிஷன் புதிய எல்டிசி விதிகள் இதோ
- மலிவான டிக்கெட்டை வாங்கவும்: நிதி அமைச்சகத்தின் புதிய விதிகளின்படி, அரசு ஊழியர்கள் பயண வகுப்பில் கிடைக்கும் ‘மலிவான கட்டணத்தை’ தேர்வு செய்ய வேண்டும். பயணத் தேதிக்கு குறைந்தது 3 வாரங்களுக்கு முன்பே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட வேண்டும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை மாதத்தில் ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பார்ட்!
ஒரு டிக்கெட் மட்டுமே: பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திற்கு ஒரு டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்யுமாறு பணியாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலமாக மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். இவை போமர் லாரி & கம்பெனி, அசோக் டிராவல்ஸ் மற்றும் ஐஆர்சிடிசி ஆகியவை ஆகும்.
- டிக்கெட் கான்சல் செய்வதைத் தவிர்க்கவும்: பணியாளர்கள் டிக்கெட்டை ரத்து செய்வதை அதாவது கேன்சல் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் செலவினத் துறை கூறியுள்ளது.
- கான்சல் செய்தால் விளக்கவும்: இருப்பினும், டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டிருந்தால், ஊழியர்கள் 72 மணி நேரத்திற்குள் விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும். முகவர்களிடம் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டாம் என்றும் ஊழியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
7வது ஊதியக்கமிஷனுக்குப் பின் என்ன? 8வது சம்பள கமிஷன் பற்றிய சமீபத்திய புதுப்பிப்பு
வரும் நாட்களில் ஊதியக்கமிஷன் முறையை ரத்து செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊழியர்களுக்கு 8வது ஊதியக்கமிஷன் இருக்காது என வட்டரங்கள் தெரிவிக்கின்றன. ஊதிய உயர்வு அல்லது திருத்தம் என்பது தனியார் துறையில் உள்ள அமைப்புக்கு நிகராக பணியாளரின் செயல்பாட்டின் அடிப்படையில் செய்யப்படும்.
இதற்கிடையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் டிரிபிள் போனான்சா கிடைக்கக்கூடும். ஊடக அறிக்கைகளின் படி, மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த மாதம் 3 பெரிய செய்திகளைப் பெறக்கூடும். அகவிலைப்படி உயர்வு, 18 மாத டிஏ நிலுவைத் தொகை பற்றிய அறிவிப்பு, வருங்கால வைப்புத்தொகை மீதான வட்டி ஆகியவை இந்த முக்கிய மூன்று அறிவிப்புகளாகும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலையில் ஊழியர்களுக்கு காத்திருக்கும் 3 பம்பர் செய்திகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR