பாராளுமன்ற வளாகம் அருகே ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த எம்.பிகள் 15வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 5-ம் தேதி துவங்கியது. இந்த இரண்டாவது அமர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு தொடங்கியது முதலே தமிழ்நாடு, தெலுங்கானா, தெலுங்குதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி-க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து இந்த அமர்வானது முதல்நாளே முடங்கியது.
தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க, தி.மு.க எம்.பி-க்கள் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி ஒற்றுமையை வெளிப்படுத்திய இருகட்சிகளும் அந்த டெக்னிக்கை நாடாளுமன்றத்திலும் சிறப்பாக கையாள்கிறது.
இதையடுத்து, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஆந்திர மாநில எம்.பி-க்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகின்றனர். கையில் பதாகைகளுடன் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போன்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி 16-வது நாளாக நாடளுமன்ற வளாகத்தில் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 5ம் தேதி நாடாளுமன்றம் தொடங்கியதில் இருந்து அதிமுக எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், இன்று காலை பாராளுமன்ற வளாகம் அருகே ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த எம்.பிகள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Delhi: TDP MPs protest in Parliament premises demanding special status for #AndhraPradesh pic.twitter.com/Skh4Me2JuR
— ANI (@ANI) March 23, 2018
TDP MP Naramalli Sivaprasad dresses up as a cattle herder to protest over demand of special status for Andhra Pradesh, other TDP MPs also staged protest in Parliament premises. Sivaprasad had also dressed up as a women & a school boy among others #Delhi pic.twitter.com/4WtewVdCx9
— ANI (@ANI) March 23, 2018