அண்மையில் இந்தியாவுக்குள் தைவானுக்கு இடையிலான உறவு அதிகரித்ததில் சீனா ஆத்திரமடைந்துள்ளது. முன்னதாக தைவானின் தேசிய தினத்தில் ஒரு இந்தியர் பங்கேற்பதைக் கண்டு அஞ்சிய சீனா, இப்போது இங்குள்ள ஊடகங்களை கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், இந்தியாவை பிரிக்க வேண்டும் என்ற அவரது நோக்கமும் அம்பலமாகி வருகிறது.
தைவான் வெளியுறவு அமைச்சர் இந்திய சேனலுக்கு அளித்து பேட்டி கண்டு, கோபம் அடைந்துள்ள சீனாவின் செய்தித்தாளான குளோபல் டைம்ஸின் ஆசிரியர் வடகிழக்கை இந்தியாவில் இருந்து பிரிக்க சீனா நடவடிக்கை எடுக்கும் என்று நேரடியாக அச்சுறுத்தியுள்ளார்.
குளோபல் டைம்ஸ் ஆசிரியர் ஹு ஷிஜின் தனது ட்வீட்டில்,, ‘இந்தியாவின் சமூக சக்திகள் தைவான் பிரச்சினையில் விளையாடுகின்றன, வடகிழக்கு இந்தியாவில் பிரிவினைவாத சக்திகளை நாங்கள் ஆதரவு அளித்து, சிக்கிமை தனிமைப்படுத்த முடியும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்த வழிகளில் நாம் பதிலடி கொடுக்க முடியும். இந்திய தேசியவாதிகள் தங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவர்களின் நாட்டை எளிதாக பிரிக்கலாம். என சீனா அச்சுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க | கல்வான் மோதல் இந்தியா- சீனா உறவை பெரிதும் பாதித்துள்ளது: அமைச்சர் ஜெய்சங்கர்
இந்தியா டுடே தைவானின் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூவை பேட்டி கண்டது, அதில் தைவான் ஒருபோதும் சீனாவின் பகுதியாக இல்லை என்று கூறினார். தைவானின் நிலையை ஏற்றுக்கொள்ளும்படி சர்வதேச சமூகத்திடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். இதன் பின்னர், இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் ஆட்சேபனைகளை எழுப்பியதோடு, தைவானுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் ஒருங்கிணந்த-சீன கொள்கை மீறப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பாஜக நெருப்புடன் விளையாடுகிறது என அப்பதிரிக்கை எச்சரித்துள்ளது. முன்னதாக, புது தில்லியில் உள்ள சீன தூதரகத்திற்கு வெளியே பாஜக தலைவர் தாஜிந்தர் பாகாவால் தைவான் தேசிய தின பதிவை இட்டதற்காக குளோபல் டைம்ஸும் கோபமடைந்து. குளோபல் டைம்ஸ் இந்த செயல், நெருப்புடன் விளையாடுவது போன்றது என்றும் இது ஏற்கனவே மோசமடைந்து வரும் இந்தியா-சீனா உறவுகளை மோசமாக்கும் என்றும் கூறியிருந்தது.
ALSO READ | இந்தியாவுக்கு மட்டும் இல்ல... சுற்றியுள்ள 21 நாடுகளுக்கும் தலைவலியாக உள்ள சீனா..!!!