உடலுறவும் இல்லை... பார்த்தது கூட இல்லை - ஆனால் குழந்தை பெற்ற 2 கைதிகள் - டேய் எப்புட்றா?

Bizarre News In Tamil: சிறையில் இருந்த கைதிகள் உடலுறவு கொள்ளாமல், ஒருவரை ஒருவர் பார்த்தும் கொள்ளாமல் வினோதமான முறையில் குழந்தை பெற்றுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 11, 2024, 04:36 PM IST
  • இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துளளது.
  • இவர்களுக்கு ஜுன் மாதம் குழந்தை பிறந்துள்ளது.
  • தற்போது அந்த குழந்தை தாயின் பெற்றோருடன் உள்ளது.
உடலுறவும் இல்லை... பார்த்தது கூட இல்லை - ஆனால் குழந்தை பெற்ற 2 கைதிகள் - டேய் எப்புட்றா? title=

Bizarre News In Tamil: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி-டேட் கவுண்டியில் உள்ள சிறையில் வெவ்வேறு வழக்குகளில் கைதாகி, கைதிகளாக இருப்பவர்கள் ஜோன் டெபாஸ் மற்றும் டெய்ஸி லிங்க். இந்த இருவரும் ஒரே சிறையில் இருந்தாலும், ஒருவருக்கு ஒருவர் பார்த்தது இல்லை, விரல் கூட பட்டது இல்லை.

ஆனால், இருவருக்கும் இடையே குழந்தை பிறந்து தற்போது ஆறு மாத காலமாகி உள்ளது. வினோதமான மற்றும் அரிய நிகழ்வான இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டெய்ஸிக்கு சிறையிலேயே குழந்தையும் பிறந்திருக்கிறது. இது எப்படி சாத்தியமானது, இவர்களுக்கு இடையே குழந்தை பிறந்தது எப்படி என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.

உடலுறவு இல்லை, பார்த்ததும் இல்லை...

ஜோன் டெபாஸின் வயது 23 ஆகும். அந்த பெண் கைதி டெய்ஸி லிங்க்கின் வயது 29 ஆகும். இருவருமே வெவ்வேறு கொலை வழக்குகளில் கைதாகி அந்த சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஆவர். இதில் டெய்ஸி அவரது கணவரை கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு 2022ஆம் ஆண்டு இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் டெய்ஸி மற்றும் ஜோன் ஆகியோருக்கு சிறையில் இருக்கும் ஏசி வென்ட் மூலம் தகவல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 1000 பேருடன் உடலுறவு... அதுவும் ஒரே நாளில்... சாதனைக்கு தயாராகும் 23 வயது இளம்பெண்!

அதாவது, சிறையில் ஒவ்வொரு அறைகளுக்கும் காற்றோட்டத்திற்காக ஏசி வென்ட் பொருத்தப்பட்டிருக்கும். இது அனைத்து அறைகளிலும் இருக்கும், இவை அனைத்து அறைகளையும் இணைக்கும் ஒன்றாகும். அறையில் இருக்கும் கழிவறையின் மீது ஏறி நின்று, அந்த ஏசி வென்ட்டின் முகப்பில் இருந்து வேறு அறையில் இருக்கும் நபர்களுடன் நீங்கள் பேசிக்கொள்ளலாமாம். ஏசி வென்ட்டை கைதிகள் இப்படி பயன்படுத்திக்கொள்கின்றனர். இதன்மூலமே, டெய்ஸிக்கும், ஜோனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

குழந்தை பிறந்தது எப்படி?

இருவரும் ஏசி வென்ட் வழியாக நீண்ட நாள்களாக பேசி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்திருக்கிறது. மேலும், நாம் இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ளலாமா என ஜோன் கேட்க, டெய்ஸியும் அதற்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறார். அதன்பின்னரே இருவரும் குழந்தை பெறுவதற்கு பிளான் போட்டுள்ளனர். முன்னர் சொன்னது போல் அவர்கள் ஒருவரை ஒருவர் தொட்டது இல்லை, பார்த்தது கூட இல்லை. இருப்பினும் இருவரும் சேர்ந்த குழந்தை பெற்றுக்கொள்ள பிளான் போட்டுள்ளனர்.

ஜோன் தனது அறையில் சுயஇன்பம் செய்து, பிளாஸ்டிக் கவரில் (Seren Wrap) தனது விந்தணுவை இருக்கமாக சிகரெட்டை போல் மடித்து, அதை அந்த ஏசி வென்ட் வழியாக டெய்ஸியின் அறைக்கு போடுவார். அதை பெற்றுக்கொண்டு, டெய்ஸி அவரிடம் உள்ள yeast infection medication applicator என்ற கருவி மூலம் தனது பிறப்புறுப்புக்குள் செலுத்திக்கொண்டுள்ளார். அதாவது, அந்த கருவி பெண்களின் பிறப்புறப்பின் உள் தொற்று ஏற்பட்டால் அதற்கு மருந்து போடுவதற்கு பயன்படுத்தப்படும் கருவியாகும். அதை வைத்து தனது பிறப்புறுப்புக்குள் அந்த பெண் ஜோனின் விந்தணுவை செலுத்தியிருக்கிறார். ஜோன் ஒரு மாதம் முழுவதும், தினமும் 5 முறை சுயஇன்பம் செய்து தனது விந்தணுவை டெய்ஸிக்கு அனுப்பி வந்துள்ளார்.

ஜூன் மாதம் பிறந்த குழந்தை

இப்படி நடப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்றும் இருந்தாலும் இதன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது சாத்தியம்தான் என்கின்றனர் மியாமியின் மருத்துவ நிபுணர்கள். இவை அனைத்து இந்தாண்டின் ஜனவரியில் நடந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி குழந்தை பிறந்தது. சிறைக்கு அருகில் இருக்கும் மருத்துவமனையில் டெய்ஸி குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது அந்த குழந்தை டெய்ஸியின் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | 1000 பேருடன் உடலுறவு... அதுவும் ஒரே நாளில்... சாதனைக்கு தயாராகும் 23 வயது இளம்பெண்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News