புதுடெல்லி: கொரோனாவால் உலகம் கடந்த பல மாதங்களாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது. கோவிட் 19 நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சிகள் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளை பரிசோதனை செய்யும் கட்டத்திற்கு பல ஆய்வுகள் முன்னேறிவிட்டன.இந்தியாவில் கொரோனாவுக்கான பரிசோதனை ஆய்வு முயற்சியில் பூடானும் பங்கெடுத்துக் கொள்ள விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
"பூடான் கோவிட் பரிசோதனைகளில் இந்தியாவுடன் இணைய விரும்புவதாக அந்நாடு இந்திய அரசிடம் தெரிவித்துள்ளது. தடுப்பூசிகளை உருவாக்கும் தனியார் நிறுவனங்கள், அதற்கான நிலையான நெறிமுறைகளுக்கு ஏற்ப சோதனைகளை நடத்துகின்றன. அதற்கான ஒரு நடைமுறை தான் இது" என்று பூடானுக்கான இந்திய தூதர் ருச்சிரா கம்போஜ் தெரிவித்தார்.
இந்தியாவின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு Kuensel என்ற பூடான் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இந்திய தூதர் Ruchira Kamboj இவ்வாறு கூறினார்.
இந்தியாவில் கோவிட் 19 நோயை குணப்படுத்த மூன்று தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு-சீரம் நிறுவனம் ஒரு மருந்தை உருவாக்கி பரிசோதனையின் மூன்றாம் கட்டத்திற்குக் முன்னேறிவிட்டது. பாரத் பயோடெக்-ஐசிஎம்ஆர் இணைந்து தயாரித்திருக்கும் முதல் மற்றும் இரண்டாம் கட்டத்தில் இருக்கும் நிலையில், Zydus Cadila நிறுவனத்தின் தடுப்பூசி இரண்டாம் கட்ட பரிசோதனையில் இருக்கிறது.
பூடானில் சில நாட்களுக்கு முன்னதாக கோவிட் -19 பாதிப்பு ஒரு நபருக்கு இருப்பது தெரிந்த பிறகு, அங்கு சில நாட்களுக்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டிருந்தது. பூடான் அரசாங்கத்துக்கு உதவுவதாக இந்திய தூதர் உறுதியளித்தார். COVID-19 தொற்றுநோய்களுக்கு மத்தியில் புதுடெல்லி "பூடானுக்கு அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் தடையில்லா இயக்கத்தை உறுதி செய்யும்" என்று கூறிய அவர், "இந்தியா எப்போதும் பூடானுடன் உறுதுணையக நிற்கும்" என்றும் உறுதியளித்தார்...
Also Read | விரைவில் முதல் COVID-19 தடுப்பூசி சோதனை தரவை வெளியிடும் ரஷ்யா