பிரதமர் மோடியின் பங்களாதேஷ் பயணம் தனித்துவமானதாக இருக்கும்: இந்திய வெளியுறவுச் செயலர்

பிரதமர் நரேந்திர மோடி இந்த வார இறுதியில் மேற்கொள்ள இருக்கும் பங்களாதேஷ் பயணம்  "மிகவும் சிறப்பு வாய்ந்ததாக" இருப்பதோடு, இது தனித்துவமான இருதரப்பு உறவுகளை மேம்படுத்த உதவும் என வெளியுறவு செயலர்  ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 24, 2021, 10:15 PM IST
  • பிரதமர் மோடியின் பங்களாதேஷ் பயணம் தனித்துவமானதாக இருக்கும்
  • இந்திய வெளியுறவுச் செயலர் கருத்து
  • கோவிட் பரவலுக்கு பிறகு பிரதமர் மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம்
பிரதமர் மோடியின் பங்களாதேஷ் பயணம் தனித்துவமானதாக இருக்கும்: இந்திய வெளியுறவுச் செயலர் title=

பிரதமர் நரேந்திர மோடி இந்த வார இறுதியில் மேற்கொள்ள இருக்கும் பங்களாதேஷ் பயணம்  "மிகவும் சிறப்பு வாய்ந்ததாக" இருப்பதோடு, இது தனித்துவமான இருதரப்பு உறவுகளை மேம்படுத்த உதவும் என வெளியுறவு செயலர்  ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்தார்.

புதன் கிழமையன்று. பிரதமர் மோடி, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரில் மார்ச் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பங்களாதேஷ் செல்கிறார்.

கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். "இந்த பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும், இது பங்களாதேஷுடனான விரிவான மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும் மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் தனித்துவமான உறவு நிலையை முன்னிலைப்படுத்த உதவும்" என்று ஷ்ரிங்க்லா கூறினார்.

இந்த பயணத்தின் போது பங்களாதேஷ் அதிபர் அப்துல் ஹமீத்தை பிரதமர் மோடி சந்திப்பார். அவர் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார். பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் பிரதமரை சந்திப்பார். பிரதமர் பங்களாதேஷை சேர்ந்த அரசியல் மற்றும் சமூகத்தின் பல்வேறு குழுக்களுடன் உரையாடுவார்.

Also Read | விமானத்தில் வந்த பெண்ணிடம் லட்சக்கணகான வெளிநாட்டு பணம் பறிமுதல் 

"பங்களாதேஷ் அதன் விடுதலைப் போரின் 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இந்த உன்னத காரணத்திற்காக  இந்திய வீரர்கள் தங்கள் உயிரையும் தியாகம் செய்து, இந்தியா தனது முழு ஆதரவையும் வழங்கியது," என்று அவர் கூறினார்.

 "இரு நாடுகளும் ராஜீய நிலையிலான உறவுகளை ஏற்படுத்தி  50 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூர்கின்றன. இது ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100 வது பிறந்த நாளையும் நினைவுகூரும் ஆண்டாகும்" என்று அவர் மேலும் கூறினார்.

பாதுகாப்பு  துறை தொடர்பான ஒத்துழைப்பு பங்களாதேஷுடனான இருதரப்பு ஒத்துழைப்பின் ஒரு முக்கிய பகுதியாகும் என்று வெளியுறவு செயலாளர் கூறினார். "சமீபத்திய ஆண்டுகளில், பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளது. "
 என அவர் மேலும் கூறினார்.

"இரு நாடுகளும் கூட்டு இராணுவப் பயிற்சிகள்,  மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை தவறாமல் மேற்கொண்டு வருகிறது" என அவர் மேலும் கூறினார்.

Also Read | லாட்டரிக்கு பணம் கொடுக்காதவருக்கும் 6 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த பெண்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News