தமிழக அரசியல் பல திருப்பங்கள் நிறைந்த ஒரு திருவிழா என்பது அனைவருக்கும் தெரியும். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர்கள் ஏமாற்றுவதும், சாதாரணமாக இருப்பவர்கள் சாதித்துக்காட்டுவதும் இங்கே வாடிக்கையான விஷயம்தான்.
அதிமுக உறுப்பினர்களுடன் சசிகலா நடத்தும் தொலைபேசி உரையாடல்களை வெறும் "நாடகம்" என்று குறிப்பிட்டதுடன், ஒரு குடும்பத்தின் விருப்பங்களுக்காக கட்சி தன்னை ஒருபோதும் அழித்துக்கொள்ளாது என்று அதிமுக கூறியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கு தொடர்பாக கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரச் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார் சசிகலா நடராஜன்.
தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியுடன் அவரது இல்லத்தில் 30 நிமிடங்கள் உரையாடினார். திங்கள்கிழமை மாலை உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் முதல்வர் பழனிசாமி சந்தித்தார்.
2021 ஆம் ஆண்டு துவக்கத்திற்குள் சசிகலா சிறையிலிருந்து வெளி வந்துவிடுவார் என அவரது உறவினர் வட்டங்களிலும் கட்சி வட்டங்களிலும் வலுவாக பேசப்பட்டு வருகிறது.
அமமுக-வின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஞாயிற்றுக்கிழமை டெல்லிக்கு சென்றதால், மாநில அரசியல் வட்டங்களில் அரசல் புரசலாக பல வதந்திகள் பரவத் தொடங்கின.
முறைகேடான சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்ற குற்றவாளிகளில் ஒருவரான வி.கே.சசிகலாவின் விடுதலை குறித்த கேள்விக்கு சிறை அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்
முறையற்ற சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் சிறைத்தண்டனைக் காலம் சட்டப்படி குறைக்கப்பட்டுள்ளதால், அவர் விரைவிலேயே விடுவிக்கப்பட உள்ளார் என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வருமான வரித் துறை, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பல பகுதிகளில், சுமார் 200 ஏக்கர் பரப்பில் உள்ள, வி.கே சசிகலாவின் சுமார் 65 பினாமி சொத்துகளை முடக்கியுள்ளது.
டிடிவி தினகரன் ஆதரவாளா்களான 19 சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள "தி வைண்ட் ஃபளவர்" ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரும்பாண்மை நிரூபிக்க சசிகலாவுக்கு ஆதராவாக இருப்பதாக கூறியிருந்த சட்டமன்ற உறுப்பினா்களை கூவத்தூர் விடுதியில் தங்க வைத்திருந்தார்.
இப்போது மீண்டும் அதே நிலை திரும்பியுள்ள நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் தமிழக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பாண்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் தனது அடையாறு இல்லத்தில் வழக்கறிஞர் ஜீனசேனனை வரவழைத்து அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாக ஒருவர் கைதானதைத் தொடர்ந்து, இது குறித்து டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸ் சென்னை வருகிறது.
இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர சசிகலா அணியிடம் லஞ்சம் பெற்றதாக சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யபட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ. 1.30 கோடியை, லஞ்ச ஒழிப்புப் போலீஸ் பறிமுதல் செய்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சுகேஷ் கூறுகையில், இரட்டை இலைச் சின்னத்துக்காக தினகரனிடம் ரூ. 50 லட்சம் பேரம் பேசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பாக டெல்லி போலீசார் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாக ஒருவர் கைதானதைத் தொடர்ந்து, இது குறித்து டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸ் சென்னை வருகிறது.
இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர சசிகலா அணியிடம் லஞ்சம் பெற்றதாக சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யபட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சுகேஷ், இரட்டை இலைச் சின்னத்துக்காக தினகரனிடம் ரூ. 50 லட்சம் பேரம் பேசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் இருந்து ரூ. 1.30 கோடியை, லஞ்ச ஒழிப்புப் போலீஸ் பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக டெல்லி போலீசார் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.