பூமியில் நாம் வாழ்வதற்கு கடல் பெரும் பங்கு வகிக்கிறது. பிரம்மிக்க வைக்கும் கடல் பயணம், எவ்வளவு பார்த்தாலும் சலிக்காத சூரிய உதயம் இப்படி மனித வாழ்க்கையின் பல்வேறு நிமிடங்களை கொண்டாட்டங்களாக மாற்றும் கடலை, உலக கடல் தினமாக நாம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8-ம் தேதி கொண்டாடி மகிழ்கிறோம்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 72-வது கூட்டத்தில் இந்தியாவின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையினில் பாகிஸ்தான் தூதர் மல்லிகா லோகி வெளியிட்ட புகைப்படம் தவறானது என தகவள்கள் வெளியாகி வருகின்றன.
பாகிஸ்தான் தீவிரவாதி மசூத் அசாரை தடை செய்தவர்கள் பட்டியலில் சேர்க்க இந்தியாவின் முயற்சிக்கு சீனா தடை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தியதால் அந்நாட்டு அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. போதைப்பொருள் கடத்துவர்களை கண்டவுடன் சுடுவதற்கு அந்நாட்டின் அதிபரான ரோட்ரிகோ டுட்டட்ரே போலீசாருக்கு அதிகாரம் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவுக்கு வருகை தருவதையடுத்து அணுசக்தி பொருள் விநியோக நாடுகளில் இந்தியா உறுப்பினராகச் சேர பேச்சுவார்த்தைகளுக்குத் தயார் என்று கூறியுள்ளது சீனா.ஆனால், ஜெய்ஷ்-இ-மொகமது அமைப்பைச் சேர்ந்த மசூத் அசாருக்கு ஐநா தடை கோரும் விவாரத்தில் சீனா தொடர்ந்து முட்டுக்கட்டைப் போடும் என்று கூறியுள்ளது. காரணம் ‘பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் எந்த ஒருநாடும் அரசியல் லாபங்களைப் பெறுதல் கூடாது” என்று கூறுகிறது சீனா.
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதட்டமான சூழலை தணிக்க நடுநிலையாக செயல்பட நாங்கள் தயார் என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
உரி ராணுவ முகாம் மற்றும் பதன்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி அதற்கான தகுந்த ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பாகிஸ்தானின் கனவு பலிக்காது என ஐ.நா., பொதுச்சபைக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
ஐ.நா., சபையில் பேசியதாவது:- உலகளவில் வறுமையும் சுகாதார பிரச்னைகளும் மிகப்பெரிய சவாலாக உள்ளன. இந்தியாவில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக துாய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்திட்டத்தில் 2 லட்சம் பள்ளிகளில் 4 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
ஐ.நா., மனித உரிமை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் 33-வது ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐ.நா.வின் நிரந்தர தூதர் அஜித்குமார் பேசுகையில்:- ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் கலவரத்தின் பின்னணியில், பாகிஸ்தானிலிருந்து தூண்டி விடப்படும் பயங்கரவாதமே காரணம்.
ஐ.நா.,வின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் மூன்று நாட்கள் சுற்று பயணமாக நேற்று இரவு இலங்கை தலைநகர் கொழும்பு வந்தடைந்தார். இலங்கை வந்துள்ள பான் கீ மூன் இன்று இரவு அந்நாடு அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங், எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார். நாளை மறுதினம் யாழ்பாணம் சென்று போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் கலந்துரையாடுகிறார்.
பாகிஸ்தானில் பதுங்கியுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் 9 முகவரிகளில் 6 முகவரிகளை ஐ.நா., உறுதி செய்துள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளான். இந்தியா பலமுறை ஆதாரத்துடன் கூறியது. ஆனால், பாகிஸ்தான் வழக்கம் போல், ஒவ்வொரு முறையும் தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என மறுத்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகீதின் பயங்கரவாதி பர்ஹான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட வன்முறையை ஐ.நாவிடம் எடுத்துச்சென்ற பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ள இந்தியா, தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் விளங்குகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.
மத்திய அரசு ‘புவியமைப்பு தகவல் ஒழுங்குமுறை மசோதா’ தயாரித்துள்ளது. இதன் மூலம் இந்திய எல்லை வரைபடத்தை தவறாக சித்திரித்து வெளியிடுவோர்க்கு சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.
அதாவது நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகள் இந்திய எல்லை வரைபடத்தை தவறாக சித்திரித்து வெளியிட்டு வருகின்றன. இதைத் தடுக்கும் நோக்கத்தில் வரைபட மசோதா சட்டம் இயற்றப்படுகிறது. சட்டம் இயற்றிய பின்பு இந்திய எல்லை வரைபடத்தை தவறாக சித்திரிக்கும் தனிநபரோ அல்லது அமைப்புக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.100 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.