சம்பள தகராறு தீர்க்கப்படும் வரை இலங்கை கிரிக்கெட் வீரர்கள், தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் வருடாந்திர மற்றும் சுற்றுப்பயண ஒப்பந்தங்களில் கையெழுத்திட மறுத்துவிட்டனர்
இலங்கைக்கு அருகில் சில தினங்களுக்கு முன்னதாக எக்ஸ்-பிரஸ் பெர்ல் என்ற சரக்குக் கப்பலில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இலங்கை கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஐ.சி.ஜி.எஸ் வைபவ் மற்றும் வஜ்ராஎன இரண்டு கடலோர ரோந்து கப்பல்களை இந்திய கடலோர காவல்படை அனுப்பியுள்ளது
‘வேல்’ இருந்தால் வேறென்ன வேண்டும், வேலவன் அருள் இருந்தால் வினையெல்லாம் நீங்கும். பண்டைய காலம் தொட்டு, நம் மரபில் பின்னிப்பிணைந்துள்ளது நம் வேலவன் முருகனின் மகிமை. வேல் கொண்டு அவன் நின்றால் வினைகள் எல்லாம் புறமுதுகிட்டு ஓடும் என்பது நாம் கண்கூடாகக் கண்டுவரும் உண்மை.
ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெற்றது. ஐ.நாவின் தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும், சீனா உட்பட 11 நாடுகள் எதிராக வாக்களித்தனர்.
இந்திய அரசு, இலங்கையை ஆதரிக்கும் என்று இலங்கை வெளிவிவகாரத்துறைச் செயலாளர் ஜெயநாத் கொலம்பிகே நான்கு நாட்களுக்கு முன்பு கூறினார். அதேபோல இன்று, இந்திய அரசின் பிரதிநிதி வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் வெளிநடப்புச் செய்தார். இது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத பச்சை துரோகம் ஆகும் என வைகோ ஆவேசமாக கூறியுள்ளார்.
சீதா மாதாவின் கோயில் உள்ள சீதா எலியா என்ற இடத்தில் இருந்து, ராம் கோயில் கட்ட சிறப்பு கல் கொண்டு வரப்படுகிறது. இந்த இடம் அசோக வனம் என்றும் அழைக்கப்படுகிறது
பொல்லார்ட்டின் அணுகுமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த முடிவிற்குப் பிறகு, மேற்கிந்திய தீவுகள் அணியும் கீரோன் பொல்லார்ட்டும், பேட்ஸ்மேனுக்கு எதிராக அப்பீல் செய்து நியாயமான விளையாட்டை விளையாடவில்லை என விமர்சிக்கப்பட்டு வருகிறார்கள்.
தமிழர்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நலன்களுக்கானது என்பதை இந்தியா பரிந்துரைக்கிறது என ஜெனிவாவிற்கான இந்தியாவின் பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்தார்.
மீனவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை மிகத் தெளிவாக இலங்கையிடம் எடுத்துரைத்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் புதன்கிழமை மாநிலங்களவையில் தெரிவித்தார்.
ராமரின் தாய்நாடான இந்தியாவில் பெட்ரோல் விலை 93 ரூபாய், ஆனால் ராவணனின் இலங்கையில் 51 ரூபாய்க்கு பெட்ரோல் கிடைக்கிறது என மாநிலங்களவை எம்.பி சுப்பிரமணியம் சுவாமி செய்யும் ஒப்பீடு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
Covid-19 தடுப்பூசிகளின் 'பரிசு' ஒன்றை அடுத்த வாரம் இலங்கைக்கு அனுப்பப்போவதாக இந்தியா அறிவித்துள்ளது என இலங்கை அதிபர் (Gotabaya Rajapaksa) கோட்டபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இந்த தடுப்பூசி ஜனவரி 27 ஆம் தேதி இலங்கைக்கு வந்து சேரும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்கரையில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 12 வரை சென்னையில் மிதமான மழையும் தெற்கு மாவட்டங்களில் அதிக மழையும் பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முள்ளிவாய்க்காலில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தில் உயிர் இழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.