தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்: S. Jaishankar

மீனவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை மிகத் தெளிவாக இலங்கையிடம் எடுத்துரைத்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் புதன்கிழமை மாநிலங்களவையில் தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 3, 2021, 06:39 PM IST
  • மீனவர்கள் கொல்லப்படுவது கண்டிக்கத்தக்கது- எம்.தம்பிதுரை.
  • அரசாங்கமும் பிரதமரும் பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்-திருச்சி சிவா.
  • இதுபோன்ற சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை-எஸ்.ஜெய்ஷங்கர்.
தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்: S. Jaishankar title=

புது தில்லி: தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்படும் விவகாரத்தை இந்தியா இலங்கையிடம் தீவிரமாக முன்னெடுத்து வைத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை மிகத் தெளிவாக இலங்கையிடம் எடுத்துரைத்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் புதன்கிழமை மாநிலங்களவையில் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையால் கடலில் நடுப்பகுதியில் மீன்பிடிக்கும்போது நான்கு மீனவர்கள் (Fishermen) கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பிரச்சினையை தமிழ் கட்சிகள் எழுப்பியதை அடுத்து இந்த அறிக்கை வந்துள்ளது.

"நாங்கள் அதை இலங்கை அரசாங்கத்திடம் வலுவான வகையில் எடுத்துரைத்துள்ளோம். குறிப்பாக இந்த குறிப்பிட்ட சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர்களுக்கு மிகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது" என்று ஜெய்சங்கர் கூறினார்.

ஜனவரி 19 ம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் காணாமல் போனதாகவும், நான்கு நாட்களுக்கு பின்னர் பால்க் ஜலசந்தியில் அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது என்றும் தி.மு.க.வின் (DMK) திருச்சி சிவா கூறினார்.

மீனவர்களின் படகு தங்களது கப்பலில் மோதியதாக இலங்கை கடற்படை கூறுகிறது. தமிழக ​​மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து துன்புறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் இந்த கொடூரத்தால் அவர்கள் மீன் பிடிக்கும் தொழிலை விட்டே வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இந்த சம்பவத்திற்கு பிரதமர் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு விரைவான மற்றும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

“அரசாங்கமும் பிரதமரும் பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

ALSO READ: Sasikala Returns: விடுதலையைத் தொடரும் விடுகதைகள்: விடை தருமா சசிகலா வருகை?

திருச்சி சிவாவுடன் இணைந்து அதிமுகவின் (AIADMK) எம்.தம்பிதுரையும் இந்த சம்பவத்தை கண்டித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த 245 மீனவர்களை இலங்கை கடற்படை இதுவரை தாக்கி கொலை செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். “இலங்கை முன்பு மீனவர்களை கைது செய்து கொண்டிருந்தது. இந்தியா அவர்களை திரும்ப அழைத்து வரும். ஆனால் மீனவர்கள் கொல்லப்படுவது கண்டிக்கத்தக்கது” என்று அவர் கூறினார். தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

"வெளியுறவுத் துறை அமைச்சர் இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், பிரதமர் இலங்கை கடற்படையின் இந்த செயலை கண்டிக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.

இது நீண்ட காலமாக நடந்து வரும் பிரச்சினை என்றும் அது குறித்து அரசு சார்பில் பல வித நடவடிக்கைகள் எடுக்கப்படுள்ளன என்றும் மாநிலங்களவை தலைவர் எம்.வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

"அடுத்தடுத்த அரசாங்கங்கள் தங்களால் முடிந்ததைச் செய்து வருகின்றன. ஆனால் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இதை அமைச்சர் கவனத்தில் கொள்வார் என்று நம்புகிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.

ALSO READ: தமிழை சுவாசித்தவர் தமிழர்களை நேசித்தவர் அறிஞர் அண்ணா- ஓ.பன்னீர்செல்வம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News