10வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று ஹைதராபாத்தில் கோலாகலமாக தொடங்கியது.
முதல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன. பெங்களூரு அணி 'டாஸ்' வென்றது. அந்த அணியின் கேப்டன் வாட்சன் ஃபீல்டிங் தேர்வு செய்தார்.
தற்போது ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.
நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி கோப்பை வென்றது. இரண்டாவது இடத்தை பெங்களுரு அணி பிடித்தது.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை குவிக்கும் வீரருக்கு ஆரஞ்ச் நிற தொப்பி வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஆரஞ்ச் நிற தொப்பியை பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தட்டிச்சென்றுள்ளார். அவர் 4 சதம், 7 அரைசதம் உள்பட மொத்தம்
973 ரன்கள் எடுத்து முதலிடத்தில் பிடித்தார். ஒரு சீசனில் 900 ரன்களுக்கு மேலாக எடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் தன் வசப்படுத்தியுள்ளார்.
முதல் இரு இடங்களை பிடித்த குஜராத் லயன்சும் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங்கை தொடங்கிய குஜராத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இக்பால் அப்துல்லா வீசிய ஒரே ஓவரில் மெக்கல்லம் 1 ரன் மற்றும் பிஞ்ச் 4 ரன் எடுத்து இருவரும் வெளியேறினார்.
குஜராத் லயன்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ஐபிஎல் தொடரின் பிளே-ஆப் தகுதி சுற்றில் இன்று மோதுகின்றன. இப்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கும்.
பிளே-ஆப் சுற்றுக்கு குஜராத், பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன. முதல் இரு இடங்களை பிடித்த குஜராத் லயன்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மோதுகின்றன. இதில் தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கவிருக்கும் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விளையாடுகிறது. ஏற்கனவே புனே அணியும், பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து விட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.